தினமணி கதிர்

காய்கள் கெடாமல் பாதுகாக்க...

கத்திரிக்காயை ஹாட் பாக்ஸில் வைத்துக் மூடினால் காய் வாடாமல் நன்றாகவும், நிறம் மாறாமலும் இருக்கும்.

ஆர். ஜெயலட்சுமி

* கத்திரிக்காயை ஹாட் பாக்ஸில் வைத்துக் மூடினால் காய் வாடாமல் நன்றாகவும், நிறம் மாறாமலும் இருக்கும்.

* வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

* சின்ன வெங்காயத்தை வாங்கி கூடையில் வைக்காமல் தரையில் வைத்தால் வெங்காயம் கெடாமல் இருக்கும்.

* பச்சை மிளகாய் காம்புகளை நீக்கி விட்டு ஒரு பாத்திரத்தில் மூடிவைத்தால் பச்சைமிளகாய் கெடாமல் இருக்கும்.

* ஊறுகாய் கெடாமல் இருக்க சிறிது எண்ணெய்யைச் சூடாக்கி ஊறுகாய் மேல்விட்டால் கெடாது.

* வெண்ணெய்யில் உப்பைத் தூவி விட்டால் அது  கெடாது.

* கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப்பட்டையில் சுற்றி வைத்தால் வாடாது; கெடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT