வீணாக்கலாமா?
ஒருமுறை அலகாபாத்தில் நேருவின் வீட்டிற்கு காந்திஜி சென்றிருந்தார். உணவருந்திய பின் ஒரு சிறு பாத்திரத்திலுள்ள நீரைக் கொண்டு கை கழுவினார்.
ஒருமுறை அலகாபாத்தில் நேருவின் வீட்டிற்கு காந்திஜி சென்றிருந்தார். உணவருந்திய பின் ஒரு சிறு பாத்திரத்திலுள்ள நீரைக் கொண்டு கை கழுவினார்.
நேருஜி வேடிக்கையாக, ""பாபுஜி! இங்கு வற்றாத திரிவேணி ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க நீரில் இவ்வளவு சிக்கனம் தேவையா?'' என்றார்.
உடனே காந்திஜி. ""அதிகமாக உள்ளது என்பதால் எதையும் வீணாக்க எனக்கு என்ன உரிமை? அப்படிச் செய்தால் நான் திருடனாகி விடுவேன்'' என்றார்.