முகப்பு
தினமணி கதிர்

விசித்திரமானவர்கள்!

ஒருமுறை ஜெயகாந்தனும், நாகேஷும் காரில் சென்னைக்கு வந்துக் கொண்டிருந்தபோது, வழியில் தொழுப்பேடு ரயில்வே லெவல் கிராசிங்கில் கேட் மூடியிருந்தது.

Updated On : 29 ஏப்ரல், 2016 at 4:37 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:39 PM

ஒருமுறை ஜெயகாந்தனும், நாகேஷும் காரில் சென்னைக்கு வந்துக் கொண்டிருந்தபோது, வழியில் தொழுப்பேடு ரயில்வே லெவல் கிராசிங்கில் கேட் மூடியிருந்தது. "இப்போ என்ன செய்வது' என்ற ஜே.கே. "பிச்சை எடுக்கலாமா' என்றார். நாகேஷ் மிரட்சியோடு திடுக்கிட, "ரயில்வே கேட் திறக்கிற வரை சும்மாதானே இருக்கணும் பிச்சை எடுத்துப் பார்ப்போமே' என்றார், ஜே.கே. அடுத்த நிமிடம் இருவரும் பேண்ட், சட்டையைக் கழற்றிவிட்டு அண்டர்வேரோடு சாலையோரத்தில் உட்கார்ந்து விட்டனர். அந்தக் கோலத்தில் இவர்களை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. போகிறவர், வருகிறவர்களிடம் பிச்சை கேட்க, சில்லறை சேர்ந்தது.

கடைசியாக, யாருக்கு எவ்வளவு தேறியது என கணக்கு பார்த்த போது, அதில் கூட ஜெயகாந்தன் தான் திறமைசாலி என்று தெரியவந்தது.

(எஸ்.சந்திரமௌலி எழுதிய "13 இன்ச் உலகம்' என்ற நூலிலிருந்து)

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.