தினமணி கதிர்

மின்சாரமும் உத்தர பிரதேசமும்

""கயாவுக்கு யாத்திரை சென்றபோது இரண்டு நாள் தங்க நேர்ந்தது. மாலையில் பார்த்தால் ஊர் முழுவதும் வீடுகள் உள்பட பல இடங்களில் படு மங்கலாக விளக்குகள் எரிந்தன.

அர்ஜுன்

""கயாவுக்கு யாத்திரை சென்றபோது இரண்டு நாள் தங்க நேர்ந்தது. மாலையில் பார்த்தால் ஊர் முழுவதும் வீடுகள் உள்பட பல இடங்களில் படு மங்கலாக விளக்குகள் எரிந்தன. காரணம் கேட்டேன். இங்கு பெரும்பாலோர் மின்சாரக் கட்டணத்தைக் கட்ட மாட்டார்கள். மேலும் கட்டவில்லையே என கவலையும்பட மாட்டார்கள். இதனால் பிகார் மின்சாரத் துறைக்கு கடும் நஷ்டம். இருந்தாலும் ஊரே, மங்கலாக இருந்தால் பேச்சு வருமே என ஊர் முழுவதும் சிங்கிள் "பேஸ்'ஸில் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது'' என்றார்.

உத்தரப் பிரதேசத்திலும், பிகார் நிலைமைதான். நகரங்களில் 40 சதவிகிதத்தினர் மின் கட்டணத்தைக் கட்ட மாட்டார்கள். இதனால் கடும் நஷ்டத்தில் தவிக்கும் அம்மாநில மின்சார வாரியம் மின் கட்டணத்தைக் கட்ட வைக்க, நூதன வழியைப் பின்பற்றுகிறது. தனியார் ஏஜன்சியைவிட்டு, மின் கட்டணத்தைக் கட்டத் தூண்டும் வகையில் மொபைலில் எஸ்எம்எஸ் கொடுக்கச் சொல்கிறது. இந்தவகையில் கொடுத்த இரு எஸ்எம்எஸ்கள் இவை: ஒரு பெண் அப்பாவிடம் சொல்கிறாள், ""அப்பா... நீ மின் கட்டணத்தைக் கட்டாவிடில், நான் எப்படி படிப்பது, பாஸ் செய்வது?'' அடுத்து மனைவி, கணவனிடம் "குளிர்காலம் வருது... மின்கட்டணம் கட்டாமல், மின்சாரம் இல்லாமல் எப்படி சமாளிக்கப் போறோம்'' என்கிறாள்'. இதன்மூலம், மேலும் 15 சதவிகித மக்கள் மின் கட்டணம் கட்டலாம் என நம்புகிறது மின்சார வாரியம்.

ஒரு கட்டுரையில் பத்திரிகையாளர் சச்சிதானந்த மூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சாட்சி!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் வேலை: காலியிடங்கள்: 105

ராமேசுவரம் - பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்றுசெல்லும்!

பெண்கள் சேவை மையத்தில் சமூகப் பணியாளர், ஐடி உதவியாளர் வேலை!

லாக்-அப் மரணம் அல்ல!காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்!நடந்தது என்ன?காவல் ஆணையர் பேட்டி!

SCROLL FOR NEXT