முகப்பு
தினமணி கதிர்

நிலவின் மண் வாசனை!

பூமியின் மண் வாசனை நமக்குத் தெரியும். நிலவின் மண் வாசனை குறித்து 1969}ஆம் ஆண்டு முதன்முதலில் நிலவுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்டிராங் குறிப்பிட்டுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:26 PM
பகிர்:

பூமியின் மண் வாசனை நமக்குத் தெரியும். நிலவின் மண் வாசனை குறித்து 1969-ஆம் ஆண்டு முதன்முதலில் நிலவுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்டிராங் குறிப்பிட்டுள்ளார்.
நிலவில் காலடி எடுத்து வைத்து, நடந்து, தன் நாட்டுக் கொடியை நட்டுவிட்டு, மீண்டும் திரும்பி விண்கலத்தின் உள்ளே வந்ததும், தலையில் அணிந்திருந்த கவசத்தைக் கழற்றியுள்ளார் ஆம்ஸ்ட்ராங். அப்போது அவர் உடை மடிப்புகளில் ஒட்டி இருந்த நிலாவின் தூசுகளில் ஒரு மூச்சை அடைக்கும் நெடியை அவரால் உணர முடிந்தது. 
""அது ஒருவிதமான பீரங்கி மருந்து வாடை போலவும், நீரில் நனைந்த, எரிந்த மரத்தின் சாம்பல் வாசனைப் போலவும் நாங்கள் உணர்ந்தோம்'' என்றார் ஆம்ஸ்ட்ராங்.
சில விண்வெளி வீரர்கள் அந்த தூசை நாக்கில் வைத்து சுவைத்தும் பார்த்தார்களாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.