தினமணி கதிர்

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்!

DIN

விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு பழனி நகரசபையில் கவுன்சிலராக இருந்தபொழுது எவ்வளவோ முயற்சி செய்தும் குடிதண்ணீர் சப்ளையை விரைவில் கொண்டு வர முடியவில்லை. சென்னையிலிருந்த மேல் அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைக்கத் தாமதமாகி வந்ததுதான் அதற்கு காரணம்.

சில நாட்களுக்குப் பின் அது சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் பழனிக்கு வருகை தந்தார். அவருக்கு ஒரு விருந்து கொடுக்கப்பட்டது. அந்த அதிகாரிக்கு மட்டும் விருந்தில் குடிப்பதற்கு உப்புத் தண்ணீர் ஒரு டம்ளரில் வைப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டார் ஜி.டி. நாயுடு. சாப்பிடும்பொழுது அந்த அதிகாரி டம்ளரில் உள்ள தண்ணீரை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தவர் "சே என்ன இது, ஒரே உப்புத் தண்ணீர்! இந்த ஊரில் நல்ல தண்ணீரே கிடைக்காதா?'' என்றார் வெறுப்புடன்.

பக்கத்தில் இருந்த ஜி.டி. நாயுடு''  இந்த ஊரில் இருப்பது ஒரே குளம்தான். துணி துவைப்பதும் ஆடு, மாடுகளைக் குளிப்பாட்டுவதும், ஊரிலுள்ள சாக்கடை நீர் வந்து சேருவதும் இங்குதான். அதனால் தான் அந்த குளத்து நீரை வைக்கவில்லை. உப்புக்கரிக்கும் கிணற்று நீரை வைத்தோம்'' என்றார். உடனே அந்த அதிகாரி சென்னை சென்றவுடன் சில நாட்களில் பழனிக்குக் குடிதண்ணீர் சப்ளை கொண்டு வருவதற்கு விரைவான ஏற்பாடுகளைச் செய்தார்.
- எம்.ரெங்கராஜன், மதுரை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT