தினமணி கதிர்

மைக்ரோ கதை

DIN

ஒரு பூங்காவில் ஒரு குழந்தை தன் தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அதன் கையில் இரண்டு ஆப்பிள் பழங்கள் இருந்தன. அந்த வழியாக வந்த ஒரு பெரியவர் 
அந்தக் குழந்தையை மறித்து, "பாப்பா இரண்டு பழம் வச்சிருக்கியே, தாத்தாவுக்கு ஒண்ணு கொடு'' என்றார்.
அந்தக் குழந்தை தன் தந்தையைத் திரும்பிப் பார்த்தது.
"ம்... கொடு'' என்றார் தந்தை.
உடனே குழந்தை தன் கையில் இருந்த இரண்டு பழங்களையும் "வெடுக்.. வெடுக்' என ஒரு கடி கடித்தது.
பெரியவரின் முகம் சுருங்கியது. 
"என்ன குழந்தை இது?' என்று முணுமுணுத்தவாறே தந்தையைப் பார்த்தார்.
குழந்தை, "தாத்தா இந்த ரெண்டு பழங்களில் இதுதான் டேஸ்ட்டா இருக்குது '' என்று சொல்லி ஒரு பழத்தைக் கொடுத்தது. 
தாத்தா ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றார்.
அ.நந்தகுமார், ஏரல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT