தினமணி கதிர்

அ.ச.ஞானசம்பந்தனின் பேராசிரியர்

DIN

சுப்பிரமணியம் ஒரு கணிதப் பேராசிரியர். அ.ச.ஞானசம்பந்தன் கல்லூரியில் படிக்கும்போது அவருக்கு கணிதப் பேராசிரியராக இருந்தவர் அவர். வகுப்பில் எளிய சமன்பாடு ஒன்றைக் கரும்பலகையில் போட்டு,"இது எல்லாருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்'' என்றார். அ.ச.ஞானசம்பந்தம் எழுந்து, "எனக்குப் புரியவில்லை. நான் உயர்நிலைப்பள்ளியில் இயற்பியல் தான் படித்தேன்'' என்றபோது, மாணவர்கள் அவரைக் கேலி செய்து சிரித்தனர். அ.ச.வை தினமும் வீட்டுக்கு வரச்சொல்லி அவருக்கு கணக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்; சிற்றுண்டியும் கொடுத்தார். "ஆறுமாதம் கணிதம் படித்து, நல்ல மதிப்பெண் பெறச் செய்த பெருமை பேராசிரியர் சுப்பிரமணியத்தையே சேரும்'' என்று நன்றி உணர்வுடன் கூறியுள்ளார் அ.ச.ஞானசம்பந்தம். அந்த கணிதப் பேராசிரியரின் மகன்தான் பாஜக பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி.
 
 சண்முகசுப்பிரமணியன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT