முகப்பு
தினமணி கதிர்

பிட்ஸ்...

கண்ணதாசன் ஒருமுறை கோலாலம்பூரிலிருந்து பினாங்கில் நடைபெற இருந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 1:00 PM
பகிர்:

கண்ணதாசன் ஒருமுறை கோலாலம்பூரிலிருந்து பினாங்கில் நடைபெற இருந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். நிகழ்ச்சிக்கு நேரமாகிவிடவே காரை டிரைவர் வெகுவேகமாக ஓட்டிச் சென்றார். கண்ணதாசன் அப்போது டிரைவரிடம் சொன்னது: "பத்து நிமிஷம் லேட்டா போனா பரவாயில்லை. பத்துநிமிஷம் முன்னதாகப் போய்விடக் கூடாது''
 சென்னை, உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று விசாரணைக்கு வந்தது. வழக்கைத் தொடுத்தவர் பெயர்: "ஹைகோர்ட்'
 வெனிசுலாவில் பொருளாதாரநிலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒருகிலோ தக்காளியின் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல்.
 அஸ்ஸாமில் நடந்த தேயிலை ஏலத்தில் ஒரு கிலோ தேயிலை நாற்பதாயிரத்துக்கு ஏலம் போனது. இது ஒரு உலக சாதனை. அருணாசலபிரதேசத்தின் டான்யா போலோ எஸ்டேட் விளைவித்த தேயிலைதான் அது.
 - வி.ந. ஸ்ரீதரன், சென்னை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.