தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட...!

எனக்கு வயது 21 ஆகிறது. இந்த இளம் வயதிலேயே எனக்கு பெரும் மன உளைச்சல். காரணம் பொடுகு, அதனால் முடி கொட்டுதல், அதனால் முன் வழுக்கை. இதற்கு ஆயுர்வேதத்தில் ஏதேனும் உபாயம் உள்ளதா? 

எஸ். சுவாமிநாதன்

எனக்கு வயது 21 ஆகிறது. இந்த இளம் வயதிலேயே எனக்கு பெரும் மன உளைச்சல். காரணம் பொடுகு, அதனால் முடி கொட்டுதல், அதனால் முன் வழுக்கை. இதற்கு ஆயுர்வேதத்தில் ஏதேனும் உபாயம் உள்ளதா? 

வே.மாதவன், காவேரிபாக்கம்.

சிறிதும் எண்ணெய்ப்பசையே இன்றி தலையை வறட்சியுடன் வைத்திருக்கும் பலருக்கும் நீங்கள் குறிப்பிடுவது போன்ற உபாதை வரக் காரணமாகலாம். இவ்விஷயத்தில் தற்சமய ஆராய்ச்சிகள் பலதும் எண்ணெய்க்கு எதிராகவே இருக்கின்றன. ஆனாலும், ஆயுர்வேதம் அதை சம்மதிக்கவில்லை என்று தான் கூற வேண்டியிருக்கிறது. முடியினுடைய வேர்பகுதியிலிருந்து பிய்த்துக் கொண்டுவரும் தோல் பகுதியானது வெளியேறும்போது மயிர்கால்களின் வலுவையும் குறைத்து விடுவதால் அவை உதிர்ந்துவிடும் நிலையில் முடி கொட்டிவிடும் பிரச்னையானது தொடங்கிவிடுகின்றது. தோல், விண்டு கீறுவது எதனால்? பூச்சிகளின் உபாதையாலா? அல்லது நீர்ப்பசையின் குறைவினாலா? நெய்ப்பின்றி கிடப்பதாலா? மன உளைச்சலால் அப்படி ஏற்படுமா? போன்ற பல சந்தேகங்களை இப்பிரச்னைக் கிளப்பி விடுவதால் இது மிகவும் ஆராய்ச்சிக்கு உட்பட்டதன் விளைவாக பழ்ண்ஸ்ரீட்ர்ப்ர்ஞ்ஹ் என்ற தலைமுடி சம்பந்தப்பட்ட துறையே தொடங்கப்பட்டு, இன்று உலகம் முழுவதும் மிகவும் பார்க்கப்படும் வலைதளமாக விளங்குகின்றது. 

எதுவாக இருந்தாலும் தோல்வறட்சியை நீக்கி வனப்பை ஏற்படுத்தும் சில ஆயுர்வேத மூலிகைத் தைலங்களை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் குணம் பெற வாய்ப்பிருக்கிறது. அய்யப்பாலாகேரதைலம், தூர்வாதி கேர தைலம், சதுக்ஷீரீ கேர தைலம், ஏலாதி கேர தைலம், ஏலாதி தைலம் போன்ற சிறந்த மருந்துகள் இருந்தாலும் ஆயுர்வேத மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு ஒன்றிரண்டு மருந்துகளை பயன்படுத்தலாம். 

இவைகளின் மூலமாக கிருமி தொற்றுகள் ஏதேனும் தோலில் இருந்தால் அவையும் மறைந்துவிடும். தலைப்பகுதி பொதுவாகவே கபம் எனும் தோஷத்தின் இருப்பிடமாகையால் அதன் மூலமாகவே சிலருக்கு அரிப்புடன் கூடிய பொடுகுத் தொல்லையும், முடி உதிர்தலும் ஏற்படலாம். அதற்கு, வெளிப்புறத் தைலத்தின் பயன்பாடு மட்டுமே போதாது என்பதால் உள்ளுக்கு ஆரக்வதாதி கஷாயம், படோலகடுரோஹிண்யாதி கஷாயம், திக்தகம்/மஹாதிக்தகம் கஷாயம் போன்றவை சரியானபடி தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தினால் குணம் தரக்கூடிய நல்ல மருந்துகளாகும்.

சொரிந்தால் செதில் செதிலாக உதிரக்கூடிய பொடுகுத் தொல்லையுடன், எரிச்சலும் இருந்தால் பித்த ரத்தங்களுடன் கேடுற்று தலையின் தோல்பகுதியில் கபதோஷத்தின் ஆதிக்கம் நடைபெறுவதை  ஊகித்து அறியலாம். கஷாயம் மருந்துகளை விட மூலிகை நெய் மருந்துகளாகிய திக்தகம்/மஹாதிக்தகம் இந்நிலையில் உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் பயன்படுத்த சிறந்தவை. உட்புற விஷச்சேர்க்கையானது உணவின் மூலமாகவோ, ஒவ்வாமை உணவுகளின்  சேர்க்கையின் மூலமாகவோ நடைபெற்றிருந்தாலும் அவையும் தோலில் பிரதிபலிக்கவே செய்யும். மாணிபத்ரம் லேஹ்யம் திருவ்ருல் லேஹ்யம் போன்றவற்றைப் பயன்படுத்தி நன்கு வயிறு பேதியாகும்படிச் செய்து நமது உடலை சுத்தப்படுத்தலாம். ரத்தத்தில் உள்ள விஷத்தை முறிக்கச் செய்து வெளியேற்றும் இவ்வகை மருந்துகளால் குடல் சுத்தம் அடைந்து பல தோல் நோய்கள் குணமடைந்துள்ளன. தலையில் ஊற்றப்படும் சிரோதாரா சிகிச்சை முறை, மூலிகைகளை அரைத்து தலையில் பொத்திவைக்கும் தலைப்பொதிச்சல் எனும் சிகிச்சை, மூக்கினுள் மருந்தைவிட்டு தலையிலுள்ள உட்புற அழுக்குகளை நெகிழச் செய்து வாய்வழியாக வெளியேற்றும் நஸ்யம் எனும் சிகிச்சை போன்றவைகளாலும் நீங்கள் பயன்பெறலாம். 

மீன், சிக்கன், தயிர், வெல்லம், பால்பொருட்கள், பகல் தூக்கம் போன்றவற்றைத் தவிர்க்கவும். தலைக்குளிக்க கடுக்காய், கருங்காலிக்கட்டை, சரக்கொன்றைப்பட்டை, வேப்பம்பட்டை ஆகியவை போட்டு காய்ச்சி ஆறிய வெந்நீரையே பயன்படுத்தவும்.

 (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT