தமிழகத்தைக் கலக்கும் "ஃபுல் ஜார்' சோடா...!
கேரளத்தின் "ஜிமிக்கி கம்மல்' பாட்டு தமிழ்நாட்டை சென்ற ஆண்டு ஒரு கலக்கு கலக்கியது. இப்போது தமிழ்நாட்டில் ட்ரெண்டாகி வருவது "ஃபுல்ஜார்' சோடா.
கேரளத்தின் "ஜிமிக்கி கம்மல்' பாட்டு தமிழ்நாட்டை சென்ற ஆண்டு ஒரு கலக்கு கலக்கியது. இப்போது தமிழ்நாட்டில் ட்ரெண்டாகி வருவது "ஃபுல்ஜார்' சோடா.
சென்ற மாதம் கேரளத்தில் சூப்பர் ஹிட்டாகி அண்டை மாநிலமான தமிழ்நாட்டிற்குள் எட்டிப் பார்க்க, சென்னையைத் தொடர்ந்து மதுரை, திருச்சி, கோவை என்று "ஃபுல்ஜார்' சோடா அலை பரவிக் கொண்டிருக்கிறது.
என்ன இருக்கிறது இந்த "ஃபுல்ஜார்' சோடாவில் ? இல்லாமலா பிரியர்கள் கூட்டம் தானா கூடுது ? தேவை இரண்டு கண்ணாடி டம்ளர்கள்.
ஜுஸ் குடிப்போமே அது மாதிரி ஒரு மெகா சைஸ் டம்ளர் ஒன்று. இன்னொன்று ஒரு குட்டி கண்ணாடி டம்ளர். பச்சை மிளகாய், இஞ்சி, புதினா பேஸ்ட் தனித் தனியாக தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
எலுமிச்சை, உப்பு, நன்னாரி சர்பத் ஜீரா, ஊற வைத்த சப்ஜா விதைகளும் தேவை. குட்டி கிளாசில் முதலில் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு , பிறகு கொஞ்சம் பச்சை மிளகாய் பேஸ்ட், இஞ்சி பேஸ்ட் , புதினா பேஸ்ட் ஆகியவற்றை ஒரே அளவில் சேர்க்க வேண்டும்.
இவற்றிற்கு மேல் ஊற வைத்த சப்ஜா விதைகளை போட்டு உப்பு சேர்க்க வேண்டும். வேண்டுமென்றால் நன்னாரி சர்பத் ஜீராவும் சேர்க்கலாம்.
இப்போது குட்டி கிளாஸ் கிட்டத்தட்ட ஃபுல்லாக இருக்கும். இந்தக் கலவையை சிறிய கரண்டியால் கலக்கி வைத்துக் கொண்டு , பெரிய கிளாசில் முக்கால் பகுதி சோடாவை நிரப்ப வேண்டும்.
சோடா நிரப்பிய பெரிய கிளாûஸ ஒரு கையிலும், இன்னொரு கையில் குட்டி கிளாûஸயும் எடுத்து, பெரிய கிளாஸýக்குள் சிறிய கிளாûஸ மெதுவாக இறக்கி விட வேண்டும். வேகமாக உள்ளே இறக்கினால் சோடா கிளாஸிலிருந்து வெளியே கொட்டும். மசாலா கலவை சோடாவுக்குள் சென்றதும் அளவுக்கதிகமாக நுரை பொங்கி வழியும். சோடாவை மசாலா கலவையுடன் ஒரே மூச்சில் குடித்துத் தீர்க்க வேண்டும். அதுதான் சவால். சேலன்ஜ். குடித்து தீர்க்கும் போது மனசிலும் தலையிலும் ஒரு விறு விறு... கிறுகிறு ஏறுவதை உணர முடியும்.
இந்த "ஃபுல் ஜார்' சோடா, காரம், உப்பு, துவர்ப்பு, இனிப்பு கலந்து "ஜிவ்'வென்று இருக்கும். இனிப்பு சேர்க்காமல் இருந்தால் காரம், உப்பு, துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இந்த சுவைகளில் சொக்கிப் போனவர்கள்தாம் "ஃபுல் ஜார்' சோடா பிரியர்கள், வலைத்தளங்களில் "ஃபுல்ஜார்' சோடாவின் பெருமைகளை காணொளியாகப் பதிவிட, அவை வைரலாகி தமிழ்நாட்டையும் எட்டிப் பார்த்தது. தமிழ்நாட்டில் "ஜிமிக்கி கம்மல்' பாட்டை எப்படி அள்ளி அணைத்துக் கொண்டார்களோ, அப்படி தமிழகத்தின் சோடா பிரியர்கள் "ஃபுல் ஜார்' சோடாவிற்கு சிவப்பு கம்பளம் விரித்து கொண்டாடி வருகின்றனர்.