தினமணி கதிர்

திரைக் கதிர்

ஜி. அசோக்

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியது முதலே ஸ்ருதிஹாசன் மும்பையில் இருக்கிறார். அவர் சொல்வது:  ""ஊரடங்கில் வீட்டிலிருக்கும்போது வழக்கத்தை விட அதிக வேலைகள் பார்க்கிறேன். தினமும் சமையல், வீட்டைச் சுத்தம் செய்வது, உடற்பயிற்சி, பழைய பாணியில் வீட்டைத் துடைப்பது நல்ல உடற்பயிற்சியாக இருக்கிறது. என் வீடு,  இரண்டு மாடி.  பாடல்களுக்கு மெட்டமைக்கிறேன். எனது இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு, வீடியோவுக்குத் தேவையான ஒப்பனையைச் செய்து கொள்கிறேன். வழக்கத்தை விட அதிக நேரம் உறங்குகிறேன்''. 

விஜய் ஆண்டனி தான் நடித்து வரும் "தமிழரசன்', "அக்னி சிறகுகள்', "காக்கி' ஆகிய 3 படங்களின் சம்பளத்தில் 25 சதவிகிதத்தை குறைத்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் தலா ரூ.1 கோடியை அவர் விட்டுக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் 3 தயாரிப்பாளர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். இதுகுறித்து "அக்னி சிறகுகள்' தயாரிப்பாளர் டி.சிவா உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

தினேஷ் கண்ணன்,   வினோத் குமார் ஆகிய இருவரின்  தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் புதியபடம் "திட்டம் இரண்டு'."யுவர்ஸ் ஷேம்ஃபுல்லி' என்ற குறும்படத்தின் மூலம் பெரிதாகக் கவனம் ஈர்த்த விக்னேஷ் கார்த்திக், இந்தப் புதிய படத்தை இயக்கி வருகிறார்.  ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மூன்றாவது படம் இது.  

ஊரடங்கின் காரணமாக முடங்கிக் கிடக்கும் நடிகைகளில்,  ஜனனி அய்யர் பாடகி யாக மாறியுள்ளார். சென்னையைச் சேர்ந்த ஜனனி அய்யர் தான் நடிக்கும் படங்களில் அவர்தான் டப்பிங் பேசுகிறார்.  ஆனால் பாடல் பாடியதில்லை. கரோனா காலத்தில் பாடகி ஆகிவிட்டார்.  "உன் நெருக்கம்...' எனத் தொடங்கும் பாடலை அவர் பாடியுள்ளார்.    

விஜய் நடித்த "பிகில்' படத்தில் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்தவர் அம்ரிதா அய்யர்.  அவர் நடிக்கும் "லிப்ட்' படத்தில் தனது காஸ்டியூம்களை  தேர்வு செய்வதுடன் அதை தயாரித்தும் பயன்படுத்தியுள்ளார்: ""எனக்கான உடைகளை நானே தேர்வு செய்தேன். புதிய வேலை பிடித்திருக்கிறது''  என அம்ரிதா தனது இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். 

தனது அறக்கட்டளை மூலம் கரோனா பாதிப்புகளுக்கு நிதியுதவி அளித்த நடிகர் விஜய் தேவரகோண்டா, நியாயமான உதவி தேவைப்படுபவர்கள் தனது இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று  கூறியிருந்தார். இதற்காக விருப்பம் உள்ளவர்கள் நன்கொடை தரலாம் என்றும் அறிவித்தார். அதன்படி சில நாட்களில் சுமார் 70 லட்சம் ரூபாய் நன்கொடை சேர்ந்தது.  நன்கொடை எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த அவர் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT