தினமணி கதிர்

மன அழுத்தத்துக்கு மருந்து!

சில குறிப்பிட்ட வகையான மன அழுத்தத்துக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுகின்றன என்று பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

DIN

சில குறிப்பிட்ட வகையான மன அழுத்தத்துக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுகின்றன என்று பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு லண்டனில் உள்ள மாட்ஸ்லே என்ஹெச்எஸ் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த மருத்துவர்கள் இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மன அழுத்தம் உடைய 39 நோயாளிகளை அவர்கள் தேர்ந்தெடுத்து மைனோசைக்ளின் என்ற ஆன்டிபயாடிக் மருந்தை நோயாளிகளின் உடலில் செலுத்தி சோதனை செய்து பார்த்திருக்கின்றனர். ஆன்டிபயாடிக் செலுத்தப்பட்ட எல்லாருடைய உடலிலும் இந்த மருந்து விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், ஒரு சிலரின் உடலில் விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதைத் தெரிந்து கொண்டனர்.

இந்த மைனோசைக்ளின் ஆன்டிபயாடிக் மருந்து நோய் எதிர்ப்பாற்றலை அடக்கக் கூடிய தன்மை படைத்தது. உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அமைப்பின் தூண்டுதலினால், மூளையில் வீக்கம் ஏற்படுகிறது. அதன் விளைவாக மிகுந்த மனச்சோர்வு, மன அழுத்தம் ஏற்படுகின்றது. மைனோசைக்ளின் ஆன்டிபயாடிக் கொடுக்கப்பட்டதும் நோயாளிகளின் மன அழுத்தம் குறைந்துவிட்டதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுபோன்ற குறிப்பிட்ட வகையான சில மன அழுத்த நோய்களுக்கு மைனோசைக்ளின் ஆன்டிபயாடிக் மருந்து பயன்படும் என்பதும் தெரிய வந்துள்ளது.

தேவையில்லாத பக்கவிளைவுகளை ஆன்டிபயாடிக் ஏற்படுத்தும் என்பது ஒருபுறம் இருந்தாலும், மன அழுத்தத்தைத் தீர்க்க ஆன்டிபயாடிக் ஒரு மருந்தாக இருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

SCROLL FOR NEXT