சிரி... சிரி...(2/01/2022)
"எதுக்குய்யா குழியில வண்டியை விட்ட?''"பள்ளம் பார்த்துச் செல்லவும்ன்னு போர்டு இருந்தது. சாலை ஓரத்தில இருந்த பள்ளத்தை பார்த்துகிட்டே
* "எதுக்குய்யா குழியில வண்டியை விட்ட?''
"பள்ளம் பார்த்துச் செல்லவும்ன்னு போர்டு இருந்தது. சாலை ஓரத்தில இருந்த பள்ளத்தை பார்த்துகிட்டே
வண்டியை ஓட்டிக்கிட்டு வந்தேன். சாலை நடுவில இருந்த பள்ளத்தைப் பார்க்காம விட்டுட்டேன்''
பா.சக்திவேல், கோயம்புத்தூர்.
* "அந்த ஆளுக்கு ஆனாலும் ரொம்ப பணத்திமிரு''
"ஏன் ?''
"வாக்கிங் கூட கார்லதான் போவாரு''
* "நீங்கள் கட்டி விற்பனை செய்யும் வீடுகளுக்கு ஏன் நான்கு வாசல் வைத்திருக்கிறீர்கள்?''
"வாங்குபவர்களுக்கு வாஸ்துபடி எந்த திசை பார்த்த வீடு தேவையோ அதற்கேற்ப மாற்றிக் கொள்ளத்தான்''
- க. ரவீந்திரன், ஈரோடு-2
* "எதுக்கு மீட்டிங்குக்கு வந்த ஆளுங்க எல்லார்கிட்டேயும் துடைப்பத்தைக் கொடுக்கறீங்க ?''
"தலைவரே... நீங்கதானே கூட்டத்தை கூட்டச் சொன்னீங்க''
* "தயிர்வடையின் மேல காராபூந்தி தூவி கொண்டு வரச் சொல்றார்''
"கொண்டு போ''
"200 கிராம் காராபூந்தியைத் தூவணுமாம், முதலாளி''
- ஏ. நாகராஜன், பம்மல்.
* "புலவருக்கு ஏன் மூச்சு வாங்குது ?''
"மன்னர் போரில் பயந்து ஓடி வரும் போது கூட, இவர் மன்னரைப் புகழ்ந்து பாடிக் கொண்டே அவர் பின்னால ஓடி வந்தாராம்''
-தீபிகா சாரதி, சென்னை -5.