தினமணி கதிர்

கல்லூரி மாணவர் வடிவமைத்த ஆடை!

திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தண்டபாணி,  விஜய் டி.வி.யின் பிரபல நட்சத்திரமான தர்ஷாகுப்தாவுக்கு ஓவியங்களால் வரையப்பட்ட ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார்.

ஆர். தர்மலிங்கம்

திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தண்டபாணி,  விஜய் டி.வி.யின் பிரபல நட்சத்திரமான தர்ஷாகுப்தாவுக்கு ஓவியங்களால் வரையப்பட்ட ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அடுத்த சொக்கனூரைச் சேர்ந்தவர் எஸ்.தண்டபாணி(21), இவர் தற்போது கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்எஸ்சி காஸ்ட்யூம் டிசைன் அண்டு ஃபேஷன் படித்து வருகிறார். இவரின் பெற்றோர் கே.சந்திரசேகர்- சுப்புலட்சுமி கைத்தறி நெசவு செய்யும் தொழில் செய்து வருகின்றனர். 

மேலும், சந்திரசேகர் பகுதிநேர பெயிண்டராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்,ஃபேஷன் டிசைனிங் துறையில் ஆர்வம் உள்ள தண்டபாணிக்கு விஜய் டி.வி. நடிகை தர்ஷாகுப்தாவுக்கு லெஹங்கா போன்ற ஆடையை வடிவமைத்து அனுப்பிவைத்துள்ளார். 

இதுகுறித்து தண்டபாணி கூறியதாவது:

சிறு வயது முதலே ஃபேஷன் டிசைனிங் எனப்படும் ஆடை வடவமைப்புத் துறையில் அதீத ஈடுபாடு இருந்து வந்தது.  தற்போது விடுமுறையில் சாமந்திப்பூவை மையமாகக் கொண்டு லெஹங்கா ஆடை ஒன்றை 2 நாள்களில் வடிவமைத்துள்னேன்.  சென்னையில் சினிமாதுறையில் உதவி ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வந்தபோது விஜய் டி.வி. நடிகை தர்ஷாகுப்தாவின் அறிமுகம் கிடைத்தது. ஆகவே, அவருக்கு அந்த ஆடையை அனுப்பிவைத்தேன்.

சாமந்திப்பூவை மையமாகக் கொண்டு நான்வடிவமைத்துள்ள  இந்த ஆடை மிகவும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் தர்ஷாகுப்தா அண்மையில் பதிவிட்டிருந்தார். அப்போது இந்த ஆடை டிரெண்டியாக உள்ளதாகக் குறிப்பிடிருந்தது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT