முகப்பு
தினமணி கதிர்

சிரி...சிரி...

""எப்படிடா உடம்பெல்லாம் காயம் ஆச்சு''""பரீட்சைக்காக விழுந்து விழுந்து படிச்சேன் சார்''

தினமணி கதிர்

சிரி...சிரி...

""எப்படிடா உடம்பெல்லாம் காயம் ஆச்சு''""பரீட்சைக்காக விழுந்து விழுந்து படிச்சேன் சார்''

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:41 AM
பகிர்:

""எப்படிடா உடம்பெல்லாம் காயம் ஆச்சு''
""பரீட்சைக்காக விழுந்து விழுந்து படிச்சேன் சார்''

-பி.சி.ரகு,
விழுப்புரம்.


""ஏண்டா?  ஸ்கூல் அப்ளிகேஷன்ல உன்னோட கார்டியன் ஆண் பாலா! பெண் பாலா!-ன்னு கேட்டிருந்ததே? 
நீ என்ன எழுதுனே?''
""பிரின்ஸ்பால்'' 

-மல்லிகா அன்பழகன்,
சென்னை.

""என்னடா சொல்றே.. உன்கூட பிறந்தது அறுபது பேரா?''
""ஆமாம். நான் கவர்மென்ட் ஆஸ்பத்திரியில பிறந்தேனாம்!''

-ஆர்.சுப்பு,
திருத்தங்கல்.

""காதுல ரயில் ஓடுற சத்தம் வருது?''
"" எனக்கு கேட்கலியே?''
""அப்போ.. ஏதாவது ஸ்டேஷன்ல நின்னுகிட்டு இருக்கும் டாக்டர்''

-டி.மோகனதாஸ்,
நாகர்கோவில்.

""என் ஹார்ட் வீக்கா இருக்கு டாக்டர்..?''
""எத்தனை "வீக்கா' அப்படி இருக்கு?''

-க.நாகமுத்து,
திண்டுக்கல்.

""விளையாடிட்டேதான் இருக்கான் டாக்டர். உடம்பு குறைய மாட்டேங்குது''
""செல்போனில் விளையாடினா எப்படி குறையும்?''

-எம்.எஸ்.மயில்,
திருநெல்வேலி.

முழு கட்டுரையைப் படிக்க →