முகப்பு
தினமணி கதிர்

சிரி...  சிரி... 

Updated On : 7 மார்ச், 2022 at 1:32 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:06 PM

''எனக்கு ஃபாலோயர்ஸ் அதிகம்டி''   
''ஃபேஸ்புக்குலயா?''
''இல்ல... நான் ரோட்டுல நடந்து போகும்போது'' 

''அவருக்கு எப்படி 'நேர்த்திக்கடன்
நாகராஜ்'ன்னு பேர் வந்திச்சு?'' 
''எல்லார் கிட்டேயும் நேர்த்தியா பேசி கடன் வாங்கறதுல கில்லாடிங்க அவரு''

ஒருத்தர்:  ஒரு பேய் என்னை 
மிரட்டிக்கிட்டே இருக்கு சாமி ...?'
மாந்திரிகர்: குடும்பப் பிரச்னைக்கெல்லாம் என்னால ஒண்ணும் செய்ய முடியாதுப்பா.

Advertisement

  ''எனக்கு லேசா 
தலைவலின்னா கூட, என் 
மனைவி அப்படியே துடிச்சுப் போயிடுவா''
''அவ்வளவு பிரியமா உங்க மேல?''
''இல்ல... சமையலுக்கு 
யாரைக் கூப்பிடறதுன்னு தான் !'

 ''என்னது... நல்லவன் 
உளறினா மழை வருமா? 
என்னய்யா சொல்ற?''
''நல்லார் ஒருவர் உளரேல் 'னு வள்ளுவர் பாடியிருக்காரே, 
தெரியாதா உங்களுக்கு ?''

''கரோனா தடுப்பூசி எங்கே சார் போடறாங்க?''
''கையிலதான் சாஹர்''
 -வி.ரேவதி, 
தஞ்சை
.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.