முகப்பு
தினமணி கதிர்

பேல்பூரி

Updated On : 7 மார்ச், 2022 at 1:33 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:06 PM

கண்டது

(ஊறுகாய் பாக்கெட்டில்)
 கொளுந்தியா ஸ்பெஷல் 
பூண்டு ஊறுகாய்
எம் அசோக்ராஜா, 
அரவக்குறிச்சிப்பட்டி.  

(பெங்களூரு கல்யாண் நகரில் உள்ள 
ஒரு ரெஸ்டாரன்ட் பெயர்)

தி செகண்ட் வொய்ஃப் ரெஸ்ட்டாரண்ட்
 ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம். 

Advertisement

 (சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனியில் உள்ள ஓர் அசைவ உணவகத்தின் பெயர்)
 பயில்வான் கிச்சன்  
த.லட்சுமி காந்த், சென்னை - 61.

(பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் கொங்கல்நகர் என்ற ஊரில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
 காஷ்மீர் உணவகம்       
 ம.ஆ.சந்திரசேகர், பொள்ளாச்சி.


கேட்டது
(நாகப்பட்டினத்தில் ஓர் இல்லத்தில்)
"காபி, கீபி சாப்பிடுறீங்களா?''
"சென்ற முறை வந்த போது தான் கீபி கொடுத்தீங்க...இப்போ காபியே கொடுங்க!''
-சரஸ்வதி செந்தில்,  பொறையார்

(திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில்  இரண்டு கல்லூரி மாணவர்கள்)
"காதுல ஏதோ புகுந்திருச்சிடா... கத்துது''
"காதுல என்ன கழுதையா புகுந்திருக்கும், கத்துறதுக்கு. ஏதாவது பூச்சி புகுந்திருக்கும்.  தண்ணிய ஊத்துடா வந்துடும்''
மு.பெரியசாமி,  விட்டுக்கட்டி.


யோசிக்கிறாங்கப்பா!
நமக்கு உயிர் கொடுத்தவங்க,
நமக்கு பொண்ணு கொடுத்தவங்க,
நமக்கு கடன் கொடுத்தவங்க ,
இவங்கதான்...
 நாம நல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்க!
 பி.கோபி, புதுப்பேட்டை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.