முகப்பு
தினமணி கதிர்

ஏழை சந்நியாசி!

தூத்துக்குடியிலே காந்தியடிகள் பேச இருந்த மேடையிலே அவர் மேடைக்கு வரும்போது இசை மழை பொழிந்து கொண்டிருந்தது.

Updated On : 13 மார்ச், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:08 PM


தூத்துக்குடியிலே காந்தியடிகள் பேச இருந்த மேடையிலே அவர் மேடைக்கு வரும்போது இசை மழை பொழிந்து கொண்டிருந்தது. விஸ்வநாததாஸ் பாடிக் கொண்டிருந்தார். "காந்தியெனும் ஓர் ஏழை சந்நியாசி' என்ற அந்தப் பாட்டை, காந்தி கேட்டு மகிழ்ந்ததோடுமட்டுமல்லாமல், அவரின் பாடும் திறனைப் பாராட்டினார். உறங்குகின்ற நாட்டு மக்களின் உணர்வைத்தட்டி
யெழுப்ப, உங்கள் இசையாற்றல் பயன்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதுமுதல் தேசபக்திப் பாடல்களை அதிகம் பாடத் தொடங்கினார் விஸ்வநாததாஸ். அவர் நடித்த புராண நாடகங்களில் கூட நாட்டுப்பற்றை வளர்க்கிற நல்ல பாடல்களை, இடைச் செருகல்களாக இசையோடு பாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.