சிரி... சிரி...
ஆசிரியை: நேத்து ஏண்டா பள்ளிக் கூடத்துக்கு வரல?மாணவன்: மேம். கிளம்புற நேரம் பார்த்து என் மாஸ்க் கிழிந்துவிட்டது!
தினமணி கதிர்சிரி... சிரி...
ஆசிரியை: நேத்து ஏண்டா பள்ளிக் கூடத்துக்கு வரல?மாணவன்: மேம். கிளம்புற நேரம் பார்த்து என் மாஸ்க் கிழிந்துவிட்டது!
ஆசிரியை: நேத்து ஏண்டா பள்ளிக் கூடத்துக்கு வரல?
மாணவன்: மேம். கிளம்புற நேரம் பார்த்து என் மாஸ்க் கிழிந்துவிட்டது!
-எஸ்.கஸ்தூரி,
தேனி.
""எப்போதும் முடி முளைக்காத மொட்டை எது?''
""மொட்டை மாடி''
-கு.அருணாசலம்,
தென்காசி.
""உன் மாமியார் பக்கத்து வீட்டிலிருந்து அழுதுகிட்டு வர்றாங்களே.. என்னன்னு கேட்கப்படாதா?''
""எங்க வீட்டு டி.வி. ரிப்பேர். அதான் பக்கத்துக்கு வீட்டில் சீரியல் பார்த்துட்டு வர்றாங்க!''
-அகரம் செ.தர்மலிங்கம்,
திருச்சி.
""ஏம்பா.. வீட்டுக்குள் திருட வந்துட்டு என்ன யோசிக்கிறே?''
""போன வாரம் நான் திருட வந்த மாதிரி இருக்கு! திரும்பி போயிடலாமான்னு தான் யோசிக்கிறேன்''
-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
""என் பொண்ணு புக்கே கதின்னு கிடக்கிறாடி?''
""நல்லா படிப்பாளா. என்ன புக்கு இன்ட்ரஸ்ட்?''
""நீ வேற...பேஸ் புக்கே கதின்னு கிடக்கிறா!''
-ஆர்.மகாதேவன்,
திருநெல்வேலி.
""என்ன இது? தோசை "ரவுண்டா' இல்லாம "செவ்வகமா இருக்கு?''
""இது "ஏ 4 சைஸ்' தோசை சார்! அதான் அப்படி இருக்கு!
-சம்பத்குமாரி,
பொன்மலை.