முகப்பு
தினமணி கதிர்

சிரி...சிரி...

""உன் பொண்டாட்டி அடிக்கிற அளவுக்கு நீ என்ன கேட்ட?''""தீபாவளிக்கு மீந்த பலகாரத்தை மக்கும் குப்பையில போடணுமா,  மக்காத குப்பையில போடணுமான்னு கேட்டேன்!''

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:49 AM
பகிர்:


""உன் பொண்டாட்டி அடிக்கிற அளவுக்கு நீ என்ன கேட்ட?''
""தீபாவளிக்கு மீந்த பலகாரத்தை மக்கும் குப்பையில போடணுமா,  மக்காத குப்பையில போடணுமான்னு கேட்டேன்!''
 

-ப.சோமசுந்தரம்,  
சென்னை- 129.

""ஆறு மாசமாக வர்றீங்களே! 
ஏதாவது இம்ப்ரூமெண்ட் தெரியுதா?''
"இப்பதான் டாக்டர். உங்க நர்ஸ் லேசா என்னை பார்த்து சிரிக்கிறா?''

- தீபிகா சாரதி,
சென்னை.

""அதிரசம் எப்படி செய்யறதுன்னு. என் மனைவியிடம் கேட்டேன்''
""என்ன ஆச்சு?''
""மத்த பலகாரங்களையும் கற்றுக் கொடுத்து எல்லாவத்தையும் செய்ய சொல்லிட்டாள்''

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

""காலம் எப்படி கெட்டுப் போச்சு பார்!''
""ஏன்? என்ன ஆச்சு?''
"" காலேஜ் காம்பஸ்ல "பேங்க்' இருக்கிற மாதிரி, "போலீஸ் பூத்' வைக்கப் போறாங்களாமே!''

-சம்பத்குமாரி,
பொன்மலை.

""போனில் உங்க மனைவிகிட்டே இப்போ பேசுனீங்களா சார்..''
""ஆமாம். எப்படி தெரியும்''
""கை, காலெல்லாம் ரொம்ப நடுங்கிச்சே''

-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

""டாக்டர்  எனக்கு கொழுப்பு அதிகமுன்னு டெஸ்ட் எடுக்காமல் எப்படி சொல்றீங்க?''
""நர்ஸ்கிட்ட வாட்ஸ் ஆப் நம்பர் கேட்டீங்களாமே. அதை வெச்சிதான்''
 

-பி.கவிதா,
தம்பரம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.