தினமணி கதிர்

திரைக் கதிர்

'மகாராஜா' திரைப்படம் விஜய் சேதுபதிக்குப் பிரமாண்ட வெற்றியைக் கொடுத்திருக்கிறது. ஒடிடி தளத்திலும் இப்படத்துக்கு அமோக வரவேற்பு எழுந்துள்ளது.

DIN

'மகாராஜா' திரைப்படம் விஜய் சேதுபதிக்குப் பிரமாண்ட வெற்றியைக் கொடுத்திருக்கிறது. ஒடிடி தளத்திலும் இப்படத்துக்கு அமோக வரவேற்பு எழுந்துள்ளது. இவர் அடுத்ததாக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். 70-ஆவது தேசிய விருதுகளில் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்திற்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் இவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி, கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் உருவாகி வரும் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்திலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

விஜய் நடித்திருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழைத் தணிக்கைக் குழு வழங்கியிருக்கிறது. இப்படத்தின் முழுக் கால அளவு 2 மணி நேரம் 59 நிமிடம் என்பதையும் அறிவித்திருக்கிறார்கள். விஜய்யின் 'பிகில்' திரைப்படமும் இதே போல 2 மணி நேரம் 59 ஓடியது. மேலும் 'மாஸ்டர்' திரைப்படமும் 2 மணி நேரம் 58 நிமிடம் கால அளவைக் கொண்டதுதான்.

மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் 'வாழை' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. தனது வாழ்க்கையில் நிகழ்ந்த துயரமிகு சம்பவத்தை மையப்படுத்தி காலத்தில் என்றும் நிலைத்து நிற்கும் படைப்பாகக் கொடுத்திருக்கிறார். இவர் தற்போது துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' படத்தை இயக்கி வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது இத்திரைப்படம். இதற்கு அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இதை மாரி செல்வராஜும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அனுராக் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் திரைக்கதை பணிகள் நிறைவடைந்து, படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டது. இக்கதையைத் திரைப்படமாகத் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இதை எட்டு எப்பிúஸாட் கொண்ட த்ரில்லர் வெப்சீரிஸாக எடுக்க அனுராக் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. வெப்சீரிúஸா அல்லது திரைப்படமோ எதுவாக இருந்தாலும் விரைவில் இதற்கான படப்பிடிப்புத் தொடங்கவிருக்கிறது.

'வாகை சூடவா' படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. நடிப்பு மட்டுமின்றி, பல துறைகளில் கவனம் செலுத்தி வரும் இனியா புதிதாக நடன பள்ளி துவங்கியுள்ளார். 'ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ' என்ற பெயரில் புதிய நடனப் பள்ளியைத் துவங்கி இருக்கிறார். இனியாவின் குரு அருண் நந்தகுமார் ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோவின் இணை நிறுவனராக உள்ளார்.

சமகால நடனம், செமி கிளாசிக்கல், திரைப்பட நடனம், ஃபியூஷன், கதக், ஒடிசி, அக்ரோபடிக், ஏரியல், தீ நடனம், லத்தீன் நடனம், ஹிப்ஹாப் நடனம் மற்றும் பண்பாட்டு கலை வடிவங்கள் இங்கே உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்...

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT