முகப்பு
தினமணி கதிர்

கண்ணை கவரும் வெள்ளி நகைகள்!

வெள்ளியில் வித்தியாசமான நகைகள், காதணிகள், கைகளுக்கு அணியும் பிரேஸ்லெட் தயார் செய்து இணையதளத்தில் விற்பனை செய்துவருகிறார் திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த வி.பசுபதிநாத்.

Updated On : 21 ஜூலை, 2024 at 12:00 AM
சித்தரிக்கப்பட்டது
பகிர்:
Updated On : 20 ஜூலை, 2024 at 7:14 PM

வெள்ளியில் வித்தியாசமான நகைகள், காதணிகள், கைகளுக்கு அணியும் பிரேஸ்லெட், பெண்களைக் கவரும் செயின், ஜடை வில்லைகளைக் கண்ணைக் கவரும் வகையில் தயார் செய்து இணையதளத்தில் விற்பனை செய்துவருகிறார் திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த வி.பசுபதிநாத்.

அவரிடம் பேசியபோது:

திருச்சி மலைக்கோட்டை எதிரே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, 'ஏ.பி.ஏ. ஜூவல்லரி' என்ற பெயரில் நகைக்கடையை எனது குடும்பத்தார் நடத்திவருகின்றனர்.

Advertisement

நான் பி.டெக் (பார்மா) படித்துவிட்டு, ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். (கெமிக்கல்) படித்தேன்.

சென்னையில் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தபோது, நண்பர் ஒருவர் 3டி தொழில் நுட்பத்தில் சில வேலைகளைச் செய்தார். அப்போது நகைகள் மீது எனக்கு இளம்வயதிலேயே இருந்த ஆர்வத்தால், 3 டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெள்ளி நகைகளை ஏன் உருவாக்கக் கூடாது என நினைத்தேன். இதன்விளைவு பலருக்கும் பயனுள்ள வெள்ளிப் பொருள்கள்.

Updated On : 26 ஜூலை, 2024 at 2:46 PM

வெள்ளி நகைகளை உருவாக்க பட்டறைக்குச் சென்று டிசைன் காண்பித்து செய்ய வேண்டும் என்றால் மிகுந்த காலதாமதமாகும். அதற்குப் பதிலாக 3 டி தொழில்நுட்பத்தில் டிசைனை உருவாக்கி அதை மெழுகில் வார்த்த செயின் அல்லது தேவைப்படும் பொருளை உருவாக்க 3 முதல் 4 நாள்களே தேவை. இதன் மூலம் நமக்குத் தேவையான டிசைன் அல்லது வாடிக்கையாளர் விரும்பும் டிசைனை உருவாக்கிக் குறைந்த விலையில் தர முடியும்.

பெண்களுக்கு மிகவும் பிடித்தமான வெள்ளி செயின், காதணிகள், மெல்லிய கொலுசுகள், ஜடை வில்லைகள், புரூச்சுகள், மூக்குத்திகள், மோதிரம், பிரேஸ்லெட்டுகள் என ஆண்களுக்கும் பெண்களுக்குமான வெள்ளிப் பொருள்கள் என முந்நூறுக்கும் மேற்பட்ட டிசைன்களை உருவாக்கி வைத்திருக்கிறேன்.

எனது தந்தை விஜயராகவன் நடத்திவரும் நகைக்கடையில், அவருக்கு உதவியாக இருக்கிறேன். எனக்கு மனைவி அன்னபூரணி மிகவும் உதவிகரமாக இருக்கிறார்.

வெளிநாடுகளிலும், பிற மாநிலங்களிலும் வெள்ளி நகைகளுக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து அதைக் குறைந்த விலையில், வித்தியாசமாகச் செய்ய முயற்சித்ததன் இப்போது ஆன்லைனில் மட்டுமே வர்த்தகம் செய்கிறேன்.

விரைவில் மேலும் பல டிசைன்கள், குழந்தைகளுக்கான பொருள்கள், பல்வேறு வகையான பரிசுப் பொருள்கள் என வித்தியாசமாகக் களத்தில் இறங்க உள்ளேன். விலையும் அதிகரித்துவருவதால், பலர் தங்கத்துக்குப் பதிலாக வெள்ளி நகைகளுக்கு மாறி வருகின்றனர்.

தங்கத்தை ஒப்பிடும்போது வெள்ளியின் விலை மிகவும் குறைவு. திரும்ப விற்றாலும் நல்ல விலைக்கு எடுத்துக் கொள்வார்கள் என்பதால் பலரும் அதை விரும்புகின்றனர். அதனால் வெள்ளி நகைகளுக்கும் மவுசு கூடுகிறது' என்கிறார் பசுபதிநாத்.

படங்கள்: வீ.நாகமணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.