முகப்பு
தினமணி கதிர்

புதிய சிற்பம்...

Updated On : 2 ஜூன், 2024 at 12:00 AM
- Picasa
பகிர்:

சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய சிற்பம் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்துவருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஏற்காடு. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், அவர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசி செல்வதைத் தவிர்க்கும் வகையில் மலையடிவாரத்தில்தான் இந்தச் சிற்பம் நிறுவப்பட்டுள்ளது.

மலைக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் குளிர்பானங்களை, தண்ணீரைக் குடித்துவிட்டு வீசிய காலி பிளாஸ்டிக் பாட்டில்களை ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் சேகரித்து, மலையடிவாரத்தில் விழிப்புணர்வுக்காக நிறுவியுள்ளது. தண்ணீர் குழாயில் தண்ணீருக்குப் பதிலாக, பிளாஸ்டிக் பாட்டில்கள் வருவதுபோன்ற வடிவமைப்பில் சிற்பம் உள்ளது.

Advertisement

மலை ஏறுமுன் இதை அத்தனை சுற்றுலாப் பயணிகள் பார்த்து வியக்கின்றனர். இருப்பினும், பிளாஸ்டிக் பாட்டில்களை மலையில் வீசுவது தொடர்கிறது.

-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.