சுஷ்மிதா தம்பதியினர் 
தினமணி கதிர்

மனிதாபிமான ஜோடி

நாட்டில் அதிக அளவில் நன்கொடை அளிக்கும் தனி மனிதர்களில் ஷிவ் நாடார், அஸிம் பிரேம்ஜி உள்ளிட்டோர் முன்னணியில் இருக்க, 'அதிக நன்கொடை அளித்த தம்பதி' என்ற வகையில் 179 கோடி ரூபாயை அளித்து முன்னணியில் இருக்கின்றனர் சுப்ரதோ பாக்சி - சுஷ்மிதா தம்பதியினர்.

சக்ரவர்த்தி

நாட்டில் அதிக அளவில் நன்கொடை அளிக்கும் தனி மனிதர்களில் ஷிவ் நாடார், அஸிம் பிரேம்ஜி உள்ளிட்டோர் முன்னணியில் இருக்க, 'அதிக நன்கொடை அளித்த தம்பதி' என்ற வகையில் 179 கோடி ரூபாயை அளித்து முன்னணியில் இருக்கின்றனர் சுப்ரதோ பாக்சி- சுஷ்மிதா தம்பதியினர்.

இருவரும் பொதுநலத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிடத்தக்கத் தொகையை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். தங்களது அர்ப்பணிப்பின் மூலம் ஒரு முன்மாதிரியாக மாறி, தொண்டு நிறுவனங்களுக்குத் தாராளமாக நன்கொடையை வழங்குகின்றனர்.

2022-இல் சுகாதார நலச் சேவைகளுக்காக ரூ. 213 கோடி நன்கொடையை அளித்தனர். 110 கோடி ரூபாயை 2023-இல் நன்கொடையாக அளித்தனர். இந்தத் தம்பதியர் பொதுநல நடவடிக்கைகளுக்காக தங்களது பங்களிப்பை செய்து வருவதற்காக 'எடேல் கிவ் ஹுருன் இந்தியா' நன்கொடையாளர் பட்டியலில் அண்மையில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி போன்றோரும் இடம்பெற்றுள்ளார்கள். சுஷ்மிதா - சுப்ரதோ பாக்சி தம்பதியினர் 2024-இல் ரூ. 179 கோடியை நன்கொடை அளித்திருப்பதினால், பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ள ஒரே ஒரு 'மனிதாபிமான ஜோடி' என்ற பெருமையைப் பெற்றுள்ளனர். இந்தத் தம்பதி 2021-இல் ஒடிஸாவில் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவுவதற்கு 340 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்தனர்.

இந்தத் தம்பதியினர் முன்னணி கணினி சேவை நிறுவனமான 'மைண்ட் ட்ரீ'யின் இணை நிறுவனர்கள். பிரபல ஒடியா எழுத்தாளரான சுஷ்மிதா பாக்சி, ஐந்து நாவல்கள் எழுதியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

77 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

விஜய் குறித்த கேள்விக்கு ”பேசவேண்டிய அவசியமில்லை” என பதிலளித்த முதல்வர் Stalin

வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு

பழனிசாமி பயணம் போன்று எனது பயணம் இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT