முகப்பு
தினமணி கதிர்

கடல்நீரில் குடிநீர்?

கடல்நீரிலிருந்து ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாக மாற்றுவதற்கு மின்முனைகளைப் பயன்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Updated On : 20 அக்டோபர், 2024 at 12:00 AM
கடல்நீர்
பகிர்:

கடல்நீரிலிருந்து ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாக மாற்றுவதற்கு மின்முனைகளைப் பயன்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்படும்போது, அரிக்கும் தன்மை, நச்சு தன்மை அடங்கிய குளோரின் வாயு துணைத் தயாரிப்பாகக் கிடைக்கிறது. இதனால், ஆராய்ச்சியாளர்கள் மின்பகுப்பைப் பயன்படுத்தி சுத்தமான இயற்கையான ஹைட்ரஜனை தயாரிக்க முடியும்.

இந்த புதிய செயல்முறையை 'ஏ.ஆர்.பி.ஏ.- இ'அமைப்பின் ஆதரவுடன் 'ஈக்வாட்டிக்' என்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பால் உருவாக்கப்பட்ட ஹைட்ரஜனை வியாபார ரீதியாகவும் விற்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுவாக, எலக்ட்ரோலைசரை பயன்படுத்தி கடல்நீர் மூலக்கூறுகளைப் பிரிக்க உதவும் இயந்திரம், கடல்நீரில் உள்ள உப்புச் சத்து, உருவாகும் நச்சுத் தன்மை கொண்ட குளோரின் வாயு காரணமாக இயந்திரத்தின் உள்பாகங்கள் நீர்த்துப் போய் இயந்திரங்கள் சேதமாகும். பழுது பார்க்கும் செலவும் கூடும். அதனால் இயற்கையான ஹைட்ரஜன் தயாரிப்புச் செலவும் அதிகமாகும்.

Advertisement

இந்தச் சிக்கலைத் தீர்க்க, ஈக்வாட்டிக் நிறுவனம் ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறது. இந்தத் தீர்வின் மூலம், கடல்நீரிலிருந்து உப்பைப் பிரிக்காமல், கடல்நீரின் ஆக்ஸிஜனில் இருந்து நீர் மூலக்கூறுகளைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து ஹைட்ரஜனை பிரிக்க முடியும்.

இதனால் சுத்திகரிப்பு இயந்திரத்தில் உப்புள்ள கடல்நீர் வருவதையும், நச்சு தன்மையுடைய குளோரின் வாய் உருவாவதையும் தவிர்க்கிறது. இயற்கையான ஹைட்ரஜனை மட்டும் உற்பத்தி செய்யலாம். பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் வாழ்நாளும் கூடும். இயந்திரத்தைப் பழுது பார்க்கும் செலவும் கணிசமாகக் குறையும்.

கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டங்கள் உலக நாடுகள் அனைத்திலும் செயல்பட்டுவருகின்றன. அந்த நீரை மேலும் சுவையுடன் தயாரிப்பதற்கான வழிகளையும் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏனென்றால், நமது கிரகத்தில் கடலில்தான் அதிக நீர் உள்ளது. எனவே, அந்தத் தண்ணீரை மனித குலத்துக்காகப் பயன்படுத்தும் வழிகளைக் கண்டறிவது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. அந்த நோக்கத்துடன் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியாளர்கள் இரவு பகலாக ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.