தபன் சின்ஹா நூற்றாண்டு
சமூக யதார்த்தம், குடும்ப நாடகம், தொழிலாளர் உரிமைகள், குழந்தைகள் சார்ந்தவை என அனைத்துத் துறைகளிலும் முத்திரைப் பதிக்கும் திரைப்படங்களை இயக்கிய தபன் சின்ஹா பிறந்த நூற்றாண்டு இந்த ஆண்டு (2024).
சமூக யதார்த்தம், குடும்ப நாடகம், தொழிலாளர் உரிமைகள், குழந்தைகள் சார்ந்தவை என அனைத்துத் துறைகளிலும் முத்திரைப் பதிக்கும் திரைப்படங்களை இயக்கிய தபன் சின்ஹா பிறந்த நூற்றாண்டு இந்த ஆண்டு (2024).
மேற்கு வங்கத் திரையுலகில் மிகப் பிரபலமான இயக்குநர்கள் நால்வர். சத்யஜித்ரே, ரித்விக் கட்டக், தபன் சின்ஹா, மிருணாள் சென்.
இவர்களில் தபன் சின்ஹா, சவுண்ட் என்ஜினீயராக திரையுலகில் பணியைத் தொடங்கினார். பின்னர், பிரபல இயக்குநராகி 45 திரைப்படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்தன. இவர் இயக்கிய 'கபூலிவாலா', இந்திய அளவில் பேசப்பட்ட படம். தாகூரின் படைப்புகளின் அபிமானியான இவர், 1946-2001-ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமாக இருந்தவர்.
Advertisement
திரைக்கதை இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் எனப் பல அவதாரங்களை எடுத்து, அனைத்திலும் வெற்றிகளைக் குவித்தவர்.
பத்மஸ்ரீ, தாதாசாகேப் பால்கே உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். 2009-இல் மறைவுற்றார். 2013-இல் இவருக்காக அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட்டு, பெருமை சேர்த்தது.