தினமணி கதிர்

பேல் பூரி

உன்னை எதிரில் பார்த்த நாள்களைவிட எதிர்பார்த்த நாள்களே அதிகம். இப்போதும்கூட!

DIN

கண்டது

(விருதுநகர் - சாத்தூர் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்தில் எழுதியிருந்தது)

'உன்னை எதிரில் பார்த்த நாள்களைவிட எதிர்பார்த்த நாள்களே அதிகம். இப்போதும்கூட!'

-பெ. பா. ஜெகநாதன், கோவில்பட்டி.

(ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

'அந்தியூர்'

(திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

'உதயத்தூர்'

-உ.ராமநாதன், நாகர்கோவில்.

(திருநெல்வேலியில் ஒரு வீட்டில் வாயிலில் எழுதியிருந்தது)

'வீட்டில் காலிங் பெல் வேலை செய்யவில்லை. எனவே 'டிங் டாங்' என்று கத்தவும்.'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

கேட்டது

(பழைய பல்லாவரத்தில் உள்ள பல் மருத்துவமனையில் மருத்துவரும், மூதாட்டியும்...)

'என்ன பாட்டி.. உங்க பேரனுக்கு பல் சொத்தைன்னு சொன்னீங்க.. செக் பண்ணா ஒண்ணுமே இல்லையே..?'

'சாரி டாக்டர்.. பெரிய பேரனுக்குப் பதில் சின்ன பேரனைக் கூட்டிட்டு வந்துட்டேன்...'

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை- 74.

(சென்னை தி.நகரில் உள்ள ஒரு வீட்டின் அருகே...)

'பூனை எல்லா பாலையும் குடிக்கறவரைக்கும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தே..?'

'அம்மா.. இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு பார்த்துட்டு இருந்தேன்மா...?'

-த.சீ.பாலு, சென்னை-120.

(வேலூர் ரயில் நிலையத்தில் இருவர் பேசியது)

'மச்சி... உன்னோட ஆருயிர் நண்பன் எப்படிடா உனக்கு எதிரியானான்...?'

'கொடுத்தக் கடனைத் திரும்பக் கேட்டேன்...'

-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

யோசிக்கிறாங்கப்பா!

எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து.

ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.

-ரஜினி செந்தில், கோவை.

மைக்ரோ கதை

சிவாவின் வீட்டுக்கு அவரது நண்பர் சந்திக்கச் சென்றார். அவருக்கு காபி கூட தராமல், சிவாவோ தனது மனைவியின் கைப்பக்குவத்தைப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார். பொறுமையிழந்த நண்பர், 'என் மனைவிக்கு மறதி அதிகம். காபியில் சர்க்கரை போட்டால், டீ தூள் போட மறப்பாள். காபியில் டீ தூள் போட்டால் சர்க்கரை போட மறந்துவிடுவாள்' என்று நகைச்சுவையாகச் சொல்லிக் காட்டினார்.

இதற்கு சிவாவோ, 'இது பரவாயில்லையே.. என் மனைவி விருந்தாளிக்கு காபி கொடுப்பதையே மறந்துவிடுவாள்' என்றார். அதன்பிறகு நண்பரோ, பெரியதாகக் கும்பிடு போட்டு ஓட்டம் பிடித்தார்.

-பி.கனகராஜ், மதுரை-16.

எஸ்.எம்.எஸ்.

பணத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தினால் வாழ்க்கை இனிக்கும்.

வார்த்தையைச் சிக்கனமாகப் பயன்படுத்தினால் உறவு நிலைக்கும்.

-அ.கருப்பையா, பொன்னமராவதி.

அப்படீங்களா!

வாட்ஸ் ஆஃப்பில் ஆன்லைன் இன்டிகேட்டர் உள்ளிட்ட புதிய சேவைகள் அறிமுகமாகி உள்ளன. இதன்படி, குழுவில் யார் யார் சாட் செய்ய தயார் நிலையில் உள்ளனர் என்பதை ஆன்லைன் இன்டிகேட்டரில் அறியலாம்.

கைப்பேசியில் சேகரித்து வைத்துள்ள எண்களிலிருந்து வரும் பதில்களை மட்டுமே நோட்டிபிகேஷன்களாக காண தேர்வு செய்யும் சேவையும் அறிமுகமாகி உள்ளது. 'டாபபுல் ரியாக்ஸன்ஸ்' என்ற சேவையில் ஒரு தகவலுக்கு யார் என்ன பதிலளித்துள்ளார்கள் என்பதைத் தொடர்ச்சியாக தெரிந்து கொள்ள உதவும்.

வாட்ஸ் ஆஃப் சாட்டில் விடியோ பதில்களின் காலநேரத்தை 60 நொடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சேனல்ஸூக்கும் வாய்ஸ் மெசேஜ்களை எழுத்து வடிவில் காணும் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சேனல்களுக்கு பிறரை வரவேற்க 'க்யூ.ஆர்.' கோட்களை உருவாக்கி அனுப்பி வைக்கும் புதிய சேவையும் அறிமுகமாகி உள்ளது.

இதேபோல், ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு வாட்ஸ் ஆஃப்பிலேயே ஆவணங்களை ஸ்கேன் செய்து அனுப்பும் சேவையும், விடியோ காலில் இருக்கும்போதே விடியோவை ஜூம் செய்து பார்க்கும் சேவையும், ஒருவருடன் இணையவழி தொலைபேசி அழைப்பை பேசிக் கொண்டிருக்கும்போதே மற்றொருவரையும் இணைக்கும் புதிய சேவையையும் வாட்ஸ் ஆஃப் அறிமுகம் செய்துள்ளது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT