ஒன்றரை லட்சம் பாம்புகள்..
கனடாவில் மணிபோபா பகுதியில் உள்ள நகர்ப்புற கிராமமான நார்சிஸில், குளிர்காலம் முடிந்து வசந்த காலம் துவங்கும்போது சிவப்பு வண்ண கார்டர் பாம்புகள் தங்கள் துளைகளிலிருந்து வெளியே வருகின்றன.
கனடாவில் மணிபோபா பகுதியில் உள்ள நகர்ப்புற கிராமமான நார்சிஸில், குளிர்காலம் முடிந்து வசந்த காலம் துவங்கும்போது சிவப்பு வண்ண கார்டர் பாம்புகள் தங்கள் துளைகளிலிருந்து வெளியே வருகின்றன. சுமார் ஒன்றரை லட்சம் பாம்புகள் ஒன்றுசேருகின்றன.
இந்தச் சமயம் இவர்களுடன் இயற்கை ஆர்வலர்களும், விஞ்ஞானிகளும் கூடுகின்றனர். இந்த இடப் பெயர்வு இனச்சேர்க்கைக்காக ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அப்போது அரவணைப்பையும் ஜோடியையும் அவை அனுபவிக்கின்றன. இவை இந்தப் பகுதிகளில் உள்ள சுண்ணாம்புக் குகைகளை நோக்கிச் செல்கின்றன.
ஆண் பாம்புகள் தனது ஜோடியை கண்டுபிடித்து, அதனை துரத்திச் சென்று கவர்கின்றன. சுண்ணாம்புக் கல்லில் உள்ள பிளவுகளை பயன்படுத்தி உள்ளே நுழைந்து உறக்க நிலையில் இருக்கும் நிலத்தடி குகைகள் உறைபனி இல்லாத புகலிடமாய் பாதுகாப்பை வழங்குகின்றன. வசந்த காலம் வந்ததும் வெளிவந்து இடம் பெயர்ந்து இந்தச் சந்திப்பில் ஈடுபடுகின்றன. இவை இதற்கு ஒருஹைவேயை குறுக்காக கடந்து செல்ல வேண்டியுள்ளது. இது சமயம் வாகனங்களில் அடிபட்டு ஏராளமாய் இறக்கின்றன.
Advertisement
இதனை கண்ணுற்று வருந்திய ஆர்வலர்கள் பாம்புகள் அடிபடாமல் இருக்க சுரங்க வழிகளை ஏற்படுத்தி அவை பத்திரமாய் செல்ல வழி செய்துள்ளனர்.அவை வழிதவறாமல் இருக்க பனி வேலிகளையும் அமைத்துள்ளனர். இந்தக் காட்சியைக் காண சுற்றுலாப் பயணிகள் திரள்கின்றனர்.