கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட கங்காவதி அருகேயுள்ள பங்கப்பூர் ஓநாய் சரணாலயத்தின் முக்கிய பகுதியின் ஆழத்தில் ஒரு சிறப்புத் தொட்டில் உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, மலையின் உச்சியில் உள்ள குகையில் டிசம்பரில் ஒரு பெண் ஓநாய் எட்டு குட்டிகளை ஈன்று வருகிறது. இது அழிந்து வரும் அபூர்வ இனங்களில் ஒன்று.
2021-ஆம் ஆண்டில் குகையை சுற்றுள்ள பகுதி சரணாலயமாக மாற்றப்பட்டவுடன் சுமார் 340 ஏக்கர் பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துவிட்டது. இந்தப் பகுதி உலர் புதர், புல்வெளிகள் கொண்ட பகுதியாகும். இதனால் 3-4 இந்திய சாம்பல் ஓநாய்களின் மகப்பேறு இருப்பிடமாக உள்ளது.
கொப்பல் தக்காண பீட பூமியில் கிழக்கு தொடர்ச்சி மலையின் ஓரத்தில் அமைந்துள்ள பகுதி. இங்கு பாறை மலைகள், புல்வெளிகள், ஆற்றங்கரை நிலங்கள், புதர்கள், பசுமையான நிலங்கள் உள்ளதுடன் குகைகளுக்கும் பஞ்சமில்லை.
இதனால் ஓநாய்களுடன் சில குகைகளில் சிறுத்தைகள், சாம்பல் கரடிகள், கோடிட்ட ஹைனா , தங்க வண்ண நரிகள், வழுவழுப்பான பூசப்பட்டநீர்நாய்கள், முள்ளம்பன்றிகள், பாங்கோலின்கள் போன்ற பல விலங்குகள் வாழ்கின்றன.
பங்காபூர் சரணாலயத்தைத் தவிர்த்து, ஹிரேசுலகெரே கரடி பாதுகாப்பு காப்பகம் மற்றும் துங்கபத்ரா நீர் நாய் பாதுகாப்பகம் ஆகியவையும் இந்த பகுதியில் உள்ளன. பொதுவாகவே விலங்குகள் மற்றும் பறவை இனங்கள் அதிகம். இவற்றுக்கு அண்மையில் எழுந்துள்ள பெரும் சவால் கல்குவாரிகள்தான்.
கொப்பலையைப் பொருத்தவரை மற்றொரு சிறப்பு விஷயம் இதனை 'ஜெயின் காசி' என அழைப்பர். இங்கு எழுநூற்றுக்கும் அதிகமான சமண மடங்கள், கோயில்கள் உள்ளன. இங்கு துங்கபத்ரா நதி ஓடுவதால் விலங்கினங்கள் நிம்மதியாய் வாழ்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.