ஓவியங்கள் 
தினமணி கதிர்

மனதை ஒருநிலைப்படுத்தும் ஓவியங்கள்...

மண்டலா ஓவியத்தைக் கற்ற பள்ளி மாணவி, விடுமுறை நாள்களில் தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுக்கும் கற்றுத் தருகிறார்.

பூர்ணிமா சண்முகநாதன்

மண்டலா ஓவியத்தைக் கற்ற பள்ளி மாணவி, விடுமுறை நாள்களில் தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுக்கும் கற்றுத் தருகிறார். அவர் பெங்களூரு பாபுசா பாளையாவில் உள்ள மாருதி வித்யாலயாவில் எட்டாம் வகுப்பு படிக்கும் பதிமூன்று வயதான ஜோஷிதா.

'மனதை ஒருநிலைப்படுத்தவும், அமைதியை ஏற்படுத்தும் சக்தியும் மண்டலா ஓவியங்களுக்கு உண்டு'' என்று கூறும் அவரிடம் பேசியபோது:

'எனது சிறு வயது முதலே கைவினைப் பொருள்கள் தயாரிப்பதிலும், ஓவியம் வரைவதிலும் ஆர்வம் கொண்டிருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டு விடுமுறையின்போது, வீட்டில் பொழுதுபோக்குக்காக மண்டலா ஓவியத்தைக் கற்றேன். பின்னர், பயிற்சியாளர் இன்றி நானே ஓவியத்தை வரையத் தொடங்கினேன்.

அப்போது எனது பெற்றோர் புருஷோத்தம் தீபா ஊக்கமும் ஆதரவும் அளித்ததால், எனது கற்பனையில் வித்தியாசமான முறையில், விதவிதமாக ஓவியங்களை வரைந்தேன், இதைப் பார்த்த பள்ளி ஆசிரியர்கள், சக மாணவிகள் பாராட்டினர்.

மண்டலா என்பதற்கு மண்டலம் அல்லது வட்டம் என்று பொருள். ஒரு வட்டத்துக்குள் முழுமையாக அடைத்ததாற்போல், வரையப்படும் ஓவியங்கள்தான் மண்டலா ஓவியங்கள். பெரும்பாலும் கோயில் மண்டபங்கள், உட்புற மேல்கூரைகள், தியானப் பீடங்கள், ஆன்மிகத் தலங்களில் இதுபோன்ற ஓவியங்கள் இருக்கும். இந்த ஓவியங்களை போர்வைகள், மேஜை விரிப்புகள் போன்றவற்றிலும், பெண்கள் தங்களின் கைகளில் மருதாணி வைத்துகொள்ளவும் பயன்படுத்துவதுண்டு.

ஓவியங்கள்

மனதை ஒருநிலைப்படுத்தவும், அமைதியை ஏற்படுத்தும் சக்தியும் மண்டலா ஓவியங்களுக்கு உண்டு. இந்த வட்டத்துக்குள் உள்ள புள்ளிகளை உற்றுப் பார்த்தால், நம்முடைய மனம் ஒருநிலைத்தன்மையை அடைவதாக அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய நவீன குறியீடுகள் நிறைந்த ஓவியங்கள்தான் இவை. இந்த ஓவியங்களை வரைய பொறுமையும் நேரமும் தேவையாகும்.

நான் வரைந்த ஓவியங்களைப் பார்த்த சக மாணவிகள் விடுமுறை நாள்களில் தங்களுக்குப் பயிற்சி அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதன்படி, அவர்களுக்குப் பயிற்சி அளித்துவருகிறேன்.

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் கல்லூரிக்குச் செல்வேன். அதன்பின்னர், எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பேன்'' என்கிறார் ஜோஷிதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

கடன் வட்டியைக் குறைத்த ஐஓபி

அகில இந்திய பல்கலை. நீச்சல் போட்டி தொடக்கம்

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

SCROLL FOR NEXT