இந்தோரில் அனூப் அகர்வால் என்பவரின் வீட்டில் எடுக்கப்பட்ட காணொளியை இதுவரை பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து அசந்துள்ளனர். காணொளியும் வைரலாகி வரும் நிலையில், மாளிகை குறித்து விவாதங்களும் எழுந்துள்ளது. வருமான வரித் துறையினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மாளிகையில் எங்கு பார்த்தாலும் 24 காரட் தங்கத்தால் செய்யப்பட பொருள்கள் அலங்கரிக்கின்றன. மாளிகைக்குள் நுழையும் முன்பே ஆடம்பர கார்களின் தொகுப்பு உள்ளது. அரிய 1936 விண்டேஜ் மெர்சிடிஸ் கார் ஒன்றும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. விலை உயர்ந்த கார்கள், மாளிகைக்குள் இருக்கும் படோடோபத்துக்கு முன்னுரையாக மாறியுள்ளது.
மாளிகையில் பத்து படுக்கையறைகள் அசர வைக்கின்றன. வரவேற்பு அறையில் இருக்கும் அலங்காரப் பொருள்கள், மாடிப் படிகளில் கைப்பிடிகள், தொங்கும் விளக்குகள், வெண்ணிறச் சுவரில் வேலைப்பாடுகள்... எல்லாம் அசல் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது. மாளிகையில் இருக்கும் தூண்கள், கூரையில் இருக்கும் வேலைப்பாடுகள் அனைத்திலும் தங்கம் இழைக்கப்பட்டுள்ளது. வரவேற்பறையில் வைக்கப்பட்டிடுக்கும் சிலைகளிலும் தங்கத் தகடுகள் போர்த்தப்பட்டுள்ளன.
சில பொருள்களில் மட்டும் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளன. சுவிட்சுகள் சுத்த தங்கத்தில் செய்யாமல் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளன. கை கழுவும் பீங்கான் பாத்திரம், நீர் வரும் திருகு குழாய் கூட தங்க முலாம் பூசப்பட்டது. அதற்கு வரும் தண்ணீர் குழாய்கள் 24 காரட் தங்க முலாமில் பளிச்சிடுகிறது. ஆக, மாளிகையில் எங்கு பார்த்தாலும் தங்க மயம்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.