'என்னது நீ உன் மாமியாருக்கு சீரியல் கதை சொல்லுவியா?'
'இல்லாட்டி,, அவங்க வீட்டுக் கதையை வேலைக்காரிக்கு சொல்லுவாங்களே...?'
'இப்போ வர்ற சீரியல்களில் ஒன்றுகூட பார்க்கிற மாதிரி இல்லேடி..?'
'பின்னே.. வீட்டில் நடக்கிற ஒரிஜினல் சண்டை மாதிரி வருமா.. சொல்லு...?'
'என்னடி.. சீரியலில் வர்ற மாதிரி மாமியார்தான் உனக்கு வேணுமா?'
'ஆமாம்மா... காலையில் சண்டை போட்டால், மாலையில் ராசியாகுற மாதிரி...'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
'மாமியார் தொந்தரவுன்னு வாடகை வீடு பார்த்தியே.. இப்போ எப்படி இருக்குடி..?'
'இங்கே ஓனர் மாமியார் வடிவில் இருக்காங்களே..?'
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
'உங்க வீட்டில் மாமியார்- மருமகள் சண்டை நடக்கும்போது, கதவு, ஜன்னல் எல்லாம் ஏன் சாத்திடறாங்க?'
'அவங்க சண்டையை யாரோ விடியோ எடுத்து, யூடிப்பில் எடுத்து போட்டுடறாங்களாம்.. அதான்..'
'ஓடிப் போகலாமான்னு கேட்ட உன் காதலர் உன்னை ஏமாத்திட்டாரா?'
'ஆமாடி.. என்னை விட்டுட்டு அவர் மட்டும் ஓடிட்டாரு...?'
-எம்.பி.தினேஷ், கோவை-25.
'என் புருஷன் ரொம்ப மாறிட்டாருடி... ?'
'எப்படி சொல்றே..?'
'முன்பெல்லாம் இரண்டு நாள் எங்கம்மா வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்னா, 'ரெண்டு நாளா'ன்னு கேட்டவரு.. இப்போ 'ரெண்டு நாள்தானா?'ன்னு கேக்குறாரு..?'
'ஆடு, புலி, புல்லுக்கட்டு கதைதான் எதிர்வீட்டுல..?'
'எப்படி?'
'அவரோட அம்மாவும் மனைவியும் சேர்ந்து இல்லாத மாதிரி அவர் பார்த்துக்குவாரு. அதே மாதிரி அவரும் தனியா இல்லாத மாதிரி அவரோட மனைவி பார்த்துக்குவாங்க?'
'மருமக வந்தவுடன் எல்லாம் இடம் மாறிப்போச்சுடி...'
'அப்போ பீரோ சாவி உன் இடுப்பில் இல்லையா சரசு...'
'சரியான கல்நெஞ்சக்காரிடி என் மாமியார்...?'
'எப்படி சொல்றே..?'
'டி.வி. சீரியல் பார்க்கும்போது கூட அவங்க கண்ணுல சொட்டு தண்ணீர் வராதுன்னா பார்த்துக்கோ?'
-வி.ரேவதி, தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.