தினமணி கதிர்

தோல்வியே சாதனையாளனாக்கியது...

'எம்.பி.பி.எஸ். மாணவியுமான என் சகோதரி உத்தரகண்ட்டின் ருதுகைரா மலையை ஏறினார்.

சுதந்திரன்

'எம்.பி.பி.எஸ். மாணவியுமான என் சகோதரி உத்தரகண்ட்டின் ருதுகைரா மலையை ஏறினார். அப்போது எனக்கு வயது பதினொன்று. அவருடன் சென்றும், என்னால் ஏற முடியவில்லை. அந்தத் தோல்வி, இன்று உயரமான சிகரங்களைத் தொட வைத்துள்ளது. என் வாழ்க்கையை மாற்றியது. ஆக்சிஜன் துணை இல்லாமல் அலாஸ்காவில் உள்ள டெனாலி மலையை ஏறுவதையும் சாத்தியமாக்கியது' என்கிறார் பதினாறு வயதான படகந்தி விஸ்வநாத் கார்த்திகே.

எவரெஸ்ட் சிகரத்தின் (8,848 மீட்டர்) உச்சியை ஹைதராபாத்தைச் சேர்ந்த படகந்தி விஸ்வநாத் கார்த்திகே மே 27

அதிகாலை 5.30 மணிக்கு தொட்டுவிட்டு, மிகக் குறைந்த வயதில் எவரெஸ்ட் உள்பட 7 மலைச் சிகரங்களில் கால் பதித்த 'முதல் இந்திய இளைஞர்', 'இரண்டாவது உலக இளைஞர்' என்ற பெருமைகளைப் பெற்றுள்ளார்.

டிசம்பர் 3இல் பிரிட்டனைச் சேர்ந்த நிர்மல் பூர்ஜா தலைமையில் அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரமான 4,892 மீ. உயரமுள்ள மவுண்ட் வின்சன் சிகரத்தை ஏறிய வயது குறைந்த முதல் இந்தியர் விஸ்வநாத் கார்த்திகே. 2022இல் ஐரோப்பாவின் மிக உயரமான சிகரமான எல்ப்ரஸ் சிகரத்தை அதன் கிழக்கு, மேற்கு பக்கங்களிலிருந்து 24 மணி நேரத்திற்குள் எட்டிய சிறு வயது இந்தியரும் இவர்தான்!

அவர் கூறியது:

'மலையேறுவதற்கு முன்பு, நான் சோம்பேறியாகவும், கல்வியில் ஆர்வம் இல்லாதவனாயும் இருந்தேன். எனது முதல் மலையேற்றத்திற்குப் பிறகு, பாடங்களில் கவனத்தைக் குவிக்க முடிந்தது. எனது மதிப்பெண்கள் 40இல் இருந்து 70 ஆக உயர்ந்தன. உலகின் பெரிய ஏழு சிகரங்களின் உச்சியைத் தொடவேண்டும் என்ற லட்சியம் நிறைவேறியுள்ளது. எவரெஸ்ட் சிகரம் ஏற சுமார் 45 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. படித்து முடித்ததும், தேசிய பாதுகாப்பு அகாதெமி மூலம் நாடு காக்கும் படைகளில் ஒன்றில் சேர வேண்டும் என்பது இப்போதைய கனவு...' என்கிறார் விஸ்வநாத் கார்த்திகே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அழகு மலர்கள்... ஜான்வி கபூர்!

அல்கெம் லேப்ஸ் லாபம் 22% உயர்வு!

தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர் இல.கணேசன்: மோடி இரங்கல்

2029 தேர்தலிலும் மோடியே பிரதமர் வேட்பாளர்! பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆர்எஸ்எஸ் பதில் என்ன?

SCROLL FOR NEXT