தினமணி கதிர்

ரயில் வைத்திருந்த இந்தியர்...

சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் வரலாற்றில் சம்பூரன் சிங் உரிமையாளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். ரயில் வைத்திருந்த ஒரே இந்தியர் இவர்தான்.

கோட்டாறு கோலப்பன்

சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் வரலாற்றில் சம்பூரன் சிங் உரிமையாளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். ரயில் வைத்திருந்த ஒரே இந்தியர் இவர்தான்.

லூதியானா- சண்டிகர் ரயில் பாதைக்காக, சில நிலங்களை ரயில்வே நிர்வாகம் 2007-இல் கையகப்படுத்தியது. அதில், கட்டானா கிராமத்தைச் சேர்ந்த சம்பூரன்சிங் நிலமும் அடங்கும். ஒரு ஏக்கருக்கு ரூ.71 லட்சம் மட்டுமே ரயில்வே துறை வழங்கி, கையகப்படுத்தியதை சம்பூரன் சிங் கண்டறிந்தார்.

இதனால் அவர் 2015-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வெற்றியும் பெற்றார். இருப்பினும், ரூ.42 லட்சம் மட்டுமே ரயில்வே நிர்வாகம் வழங்கியதையடுத்து, மாவட்ட நீதிமன்றத்தை அவர் நாடினார்.

அங்கு நீதிபதி ஜஸ்பால் வர்மா அளித்தத் தீர்ப்பில், 'செலுத்தப்படாத நிலுவைத் தொகைக்காக தில்லி - அமிர்தசரஸ் ஸ்வர்ண சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலையும், லூதியானா ரயில்வே நிலைய அலுவலகத்தையும் ஜப்தி செய்ய வேண்டும்' என்றார். இதன்படி, 2017-இல் லூதியானா ரயில் நிலையத்துக்குச் சென்ற சம்பூரன் சிங்க ரயிலின் உரிமையைப் பெற்றார்.

பெரிய தொழிற்துறை குழுக்களால் கூட அடைய முடியாத ரயிலின் உரிமையை இந்தியாவில் பெற்ற ஒரே நபர் என்ற உரிமையையும் இவர் பெற்றார்.

இருப்பினும், நீதிமன்ற உத்தரவின்பேரில், ரயில் சிறிது நேரத்திலேயே விடுவிக்கப்பட்டது. இதனால், சம்பூரன் சிங் 5 நிமிடங்கள் மட்டுமே ரயிலின் உரிமையாளராக இருந்தார். இந்தத் தனித்துவமான வழக்கு நீதிமன்றத்தில் இன்றும் நிலுவையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT