தினமணி கதிர்

சிரி... சிரி...

கல்யாண மண்டபத்துல அறிவிப்புப் பலகை வைச்சிருக்காங்களே.. என்ன இருக்கு அதில்..?'

DIN

கல்யாண மண்டபத்துல அறிவிப்புப் பலகை வைச்சிருக்காங்களே.. என்ன இருக்கு அதில்..?'

'மொய் எழுதுவதற்குப் பணம் இல்லாவிட்டாலும், ஜி.பே. பண்ணலாமாம்...'

-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.



'எதுக்குடி என் விரலில் எலுமிச்சைப் பழத்தைச் சொருகுறே..?'

'எந்த நேரமும் மொபைல் போனில் கை வைக்காமல் இருக்க...!'

-பர்வதவர்த்தினி, பம்மல்.



'செல்போனை கொடுத்த உடனே என் குழந்தை அழுகையை நிறுத்தியது..?'

'அது சரி... உன் கணவர் எதுக்கு அழுறாரு...?'

'அவரோட செல்போனை பிடிங்கி கொடுத்தேன்.. அதுக்குதான்...'

-வி.சாரதி டேச்சு, சென்னை.



'செவன் த்ரீ ஃபோர் நைன்னு சொல்லிட்டே ரோடில் போறீங்க.. எதுக்கு...?'

'பின் நம்பரை மறந்துட்டா ஏ.டி.எம். மிஷினில் இருந்து பணம் வராதே. அதுக்குதான்...'



'இதென்ன அமைச்சரே.. வினோதமான உபகரணமாக இருக்கே...?'

'இதற்கு பெயர் செல்போன் மன்னா... டைம் மிஷினில் 2025-க்கு பயணித்து அங்கிருந்து வாங்கி வந்தேன்...'

-அ.ரியாஸ், சேலம்.



'செல்போன் கேட்டா எங்க அப்பா, அம்மா ரொம்ப யோசிக்கிறாங்கடீ...'

'நீ தலைகுனியக் கூடாதுன்னு நினைக்கிறாங்களோ... என்னவோ...?'



'மீட்டர் சரியாக ஓடலைன்னு 'மீட்டர்களின் ராஜா'ன்னு சொல்லி ஒரு மீட்டரை இ.பி. ஆபிஸ்காரங்க எடுத்து வந்து வைச்சிருக்காங்க..?'

'அது ஒழுங்கா ஓர்க் ஆகுதுல்ல...'

'ராஜா மாதிரியே ஒரே ஓட்டமா ஓடுது சார்...'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.



'அரசர் போர் களத்துக்கு போகாமலேயே எப்படி ஜெயித்தார்...'

'ஏ.ஐ. உதவியால்தான்...'

-மஞ்சுதேவன், பெங்களூரு.



'என் கணவர் ஆபிஸ் போகும்போது, டி.வி. ரிமோட்டை எடுத்துட்டு போயிட்டார்...?'

'போன் பண்ண வேண்டியதுதானே...'

'அவர் போன் என்று நினைத்து டி.வி. ரிமோட்டை கொண்டு போயிட்டார்...'



'ஏன்டா சந்தோஷமாய் இருக்கே... பின் ஏன் சோகமா ஸ்டேட்டஸ் வைச்சிருக்கே...?'

'சொந்தக்காரங்க சந்தோஷமாய் இருக்கட்டும்தான்...'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT