அடிப்படை வசதிகள் இல்லாமல் தெருவோர குடிசைகளில் வசிக்கும் சிறார்களுக்கு உணவு உடை கல்வி வழங்கி வருகிறது சென்னை தண்டையார்பேட்டையில் செயல்படும் கருணாலயா. இந்த விடுதியில் தங்கி படித்துவரும் மாணவ, மாணவிகள் அனைவரும் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை மண்ணடி ஜார்ஜ் டவுனில் வசிக்கும் செனிதா தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து, பத்தாம் வகுப்பில் ஐநூறுக்கு 434 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
'450 மதிப்பெண்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். குடிசையில் படிக்க இட வசதி இல்லை. நான் படிக்கும் முத்தையாலுபேட்டை பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாலை 7 மணி வரை படிக்க அனுமதி வழங்கினர்.
இரவு நேரத்தில், அதிகாலையில் தெருவிளக்கில் படித்து வந்தேன். வழக்குரைஞராக வேண்டும் என்பது லட்சியம்'' என்கிறார் செனிதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.