சிரி... சிரி... 
தினமணி கதிர்

சிரி... சிரி...

மன்னா ஏன் ஓடுகிறீர்கள்? எதிரிநாட்டு மன்னன் தனது படைகளோடு வருகிறாரே?

DIN

மன்னா ஏன் ஓடுகிறீர்கள்?

எதிரிநாட்டு மன்னன் தனது படைகளோடு வருகிறாரே?

ஓட வேண்டாம்.. மன்னா.. நாம் போருக்கு வரவில்லை. அண்டை நாட்டு இளவரசியின் திருமண விழாவுக்கு வந்துள்ளோம்..

-அ.ரியாஸ், சேலம்.

எங்க வீட்டுல இப்படி சண்டைக்கு நிற்கிற உங்கப் பொண்ணுக்கு கல்யாணத்துக்கு முந்தி உங்கக்கிட்ட எப்படி இருந்தா?

சண்டைக்கான பயிற்சி எடுத்துக்கிட்டு இருந்தா?

-பர்வதவர்த்தினி, பம்மல்.



முதல் பந்தியில் சாப்பிட்டுட்டு மறுபடியும் இரண்டாவது பந்தியிலேயேயும் சாப்பிடுறீங்களே?'

சாப்பிடுவதற்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மாத்திரையை சாப்பிடாம விட்டுட்டேன்..

-எம்.பி.தினேஷ், கோவை-25.



நீங்கப் பொண்ணுக்குச் சொந்தமா?, பையனுக்குச் சொந்தமா?

ரெண்டு பக்கமும்தான் சொந்தம்தான்...

இது கலப்புத் திருமணம் ஆச்சே.. எப்படி ரெண்டு பக்கமும் சொந்தமா இருக்க முடியும்?

பையன் எனக்கும், பொண்ணு என் மனைவிக்கும் சொந்தம். ஹிஹி... எங்களுக்கும் கலப்புத் திருமணம்தான்.



பொண்ணு பார்க்க போயிருந்தியே என்னாச்சுடா மாப்ளே?

வேற ஒரு பையனும் பார்த்துட்டு போயிருக்காங்களாம். அவன் வேண்டாம்னா பார்க்கலாமுன்னு சொல்லியிருக்காங்க?



பொண்ணோட அப்பா யாரையும் நம்ப மாட்டார்..?

அவரே மொய் வசூல் பண்றதைப் பார்த்தாலே தெரியுமா சார்..



எதுக்கு கல்யாணத்துக்கு மறுநாளே உங்க அம்மா, அப்பாவை திட்டுறே..

வீட்டு வேலை எதையுமே கற்றுத் தராமல் என் பெண்டாட்டிகிட்ட பாட்டு வாங்க வச்சிட்டாங்களே..'



பொண்ணு கிளி மாதிரி இருந்திச்சேன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

அதை ஏன் வருத்தமா சொல்றே...

கல்யாண வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையா, கீ.. கீ.. சுத்தி வீட்டு சாவி, பீரோ சாவி..பாங்க் லாக்கர், சாவின்னு எல்லாத்தையும் வாங்கி இடுப்புல வச்சிக்கிட்டா?



மண்டபத்துல ஒரு பொண்ணு தலைவிரி கோலமா, மணப்பெண் கூடவே சுத்துதே.. யார் அது...

மணப்பெண்ணுக்கு மேக்கப் போட வந்த பொண்ணு...



உனக்கு கல்யாண நேரம் நெருங்கிடுச்சி தம்பி.... இன்னும் மூணு மாசத்துல முடிஞ்சிடும்...

ஏற்கெனவே கஷ்டத்துல இருக்கேன் ஜோதிடரே...

கஷ்டத்தோடதாம்பா கஷ்டம் வந்து சேரும்...



வீட்டுக்கு வயசானவங்களை குடி வச்சா ஏதாச்சும் ஆயிடும்னு புதுசா கல்யாண ஜோடியை குடிவெச்சேன்...

நல்லதுதானே அது...?

அவங்க .. டெய்லி சண்டை போட்டுக்கிட்டு நம்பளை சாக அடிக்கிறாங்க.. சார்...



கல்யாணத்துக்குப் பிறகு நான் ரொம்பப் பொறுமைசாலியா மாறிட்டேன்...

மாறிட்டியா?, இல்லை மாத்தப்பட்டியா?

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT