தினமணி கதிர்

அன்றும் இன்றும்..!

மூன்றரை அடி உயரமுடைய ஆர்த்தி டோக்ரா, தனது இளம் வயதில் உருவக் கேலிக்கு ஆளாகினார்.

ராஜிராதா

மூன்றரை அடி உயரமுடைய ஆர்த்தி டோக்ரா, தனது இளம் வயதில் உருவக் கேலிக்கு ஆளாகினார். இன்றோ அவர் ஐ.ஏ.எஸ். அலுவலராகி முன்மாதிரியாக இருக்கிறார். 'தோற்றத்தால் ஆளை மதிப்புப் போடும் இந்த உலகில் உண்மையான வலிமை உள்ளிருந்து வருகிறது' என்பதற்கு எடுத்துக்காட்டு இவர்தான்.

இவருடைய பெற்றோர் கர்னல் ராஜேந்திர டோக்ரா, குங்குமம் டோக்ரா ஆகிய இருவரும் பள்ளிகளில் முதல்வராகப் பொறுப்பு வகித்தவர்கள். அவர்கள் ஆர்த்திக்கு தன்னம்பிக்கையை விதைத்தனர்.

டேராடூனில் பள்ளிப் படிப்பைச் சிறப்பாக முடித்த ஆர்த்தி, தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டமும், முதுகலை பட்டமும் பெற்றார். கேலியும் கிண்டலுக்கும் மத்தியில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கவனம் செலுத்தினார். மன உறுதியோடு தேர்ச்சி பெற்று, ஐ.ஏ.எஸ். அலுவலராகியுள்ளார்.

ராஜஸ்தானில் பணி நியமனம் கிடைத்து, பண்டி, பிகானீர் மற்றும் ஆஜ்மீரில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். ஜோத்பூர் வித்யூத் வித்ரதன் நிகாம் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக அவரது பணி மிகவும் சிறப்புடையது. இதற்காக அப்போதைய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமால் கெளரவிக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் இணைச் செயலராகவும், சிறப்புச் செயலராகவும் பணியாற்றினார்.

தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்புத் துறையின் செயலராகப் பணியாற்றி வரும் அவரது சாதனைகள், அதிகாரம், ஊக்கமளிக்கும் இருப்பையே மக்கள் பார்க்கிறார்கள். உயரத்தையே பார்ப்பதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடக்கு பச்சையாறில் மீன் பிடிக்க குத்தகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

விட்டில் பூச்சிகள்...

தெக்கலூா் அரசுப் பள்ளி நாட்டுநலப் பணித் திட்ட மாணவிகளுக்கு பரிசளிப்பு

வால்பாறை அருகே பெண் புலி உயிரிழப்பு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 7% உயா்வு

SCROLL FOR NEXT