தினமணி கதிர்

பேல்பூரி

நாட்டில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் மின்சாரம் !

இணையதளச் செய்திப் பிரிவு

கண்டது

(சென்னையில் இருசக்கர வாகனம் ஒன்றின் பின்புறம் எழுதப்பட்டிருந்த வாசகம்)

நாட்டில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் மின்சாரம் !

-ஏ.விக்டர் ஜான், திருமுல்லைவாயல்.

(புதுச்சேரியில் உள்ள கிராமத்தின் பெயர்)

தேடுவார்நத்தம்

-அ.விஜயபாரதி, கரையாஞ்சாவடி.

(மயிலாடுதுறையில் ஆட்டோ ஒன்றில் எழுதப்பட்டிருந்த வாசகம்)

உங்களுக்காகச் சுமப்பேன்... சுகமாகச் சுமப்பேன்!

-க.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை.

கேட்டது

(நாகர்கோவில் கோட்டாரில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் வாடிக்கையாளரும், கடைக்காரரும்...)

'சார்... எப்பவும் பத்து முட்டைதான் ஏன்?''

'ஃப்ரீட்ஜ் பத்துதான் சாப்பிடும் அண்ணாச்சி...''

'என்ன சொல்றீங்க?''

'பத்துக்குதான் இடம் இருக்குதுன்னு சொல்றேன்...''

-மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான்விளை.

(மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இருவர்)

'பெண் பார்க்கப் போக ஏன் பயப்படுறீங்க?''

'போனவாரம் பொண்ணு பார்க்கப்போன இடத்துல, பொண்ணோட பேரண்ட்ஸ் அமைதியா இருந்தாங்க. ஆனா பொண்ணு, 'டைவர்ஸ் ஆச்சுன்னா... என்ன ஜீவனாம்சம் கொடுப்பீங்க?'ன்னு கேட்டுட்டா, அதான்!''

-பெ.நா.மாறன், மதுரை.

(திருச்சி நகைக்கடையில் இரு பெண்கள்)

'ஏதாச்சும் ஒண்ணு சீக்கிரம் முடிவு பண்ணு!''

'ஏன், கடையைச் சாத்தப்போறாங்களா?''

'இல்லை... விலை ஏறிடப்போகுது!''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

யோசிக்கிறாங்கப்பா!

பணத்தை நாம் தேடவேண்டும். புகழ் நம்மைத் தேடிவரவேண்டும்.

-வி.ந. ஸ்ரீதரன், சிறுசேரி.

மைக்ரோ கதை

'ஏங்க, நம்ம பேத்திக்கு காது குத்து வச்சிருக்காங்களாம். நம்ம பையன் மிதுன் போன் பண்ணினான்!'' என்றாள் மங்கை, தன் கணவர் பரசுராமனிடம்.

'கல்யாணமாகிப் போனவன் அஞ்சு வருஷமா எட்டிக்கூடப் பாக்கல... இப்ப மட்டும் என்னவாம்?'' என்றார் பரசுராமன்.

'பொண்ணு வீட்டுச் சொந்தங்கள் மத்தியில பேத்திக்கு நாம நகை நட்டுன்னு ஏதாவது போட்டா கெளரவமா இருக்கும்னு சொல்றான்!'' என்றாள் மங்கை.

'நமக்கு இருக்கிற கஷ்டத்துல நகைக்கு எங்க போறது? பெத்தவங்களே வேண்டாம்னு சொன்னவன் இப்ப ஆதாயத்திற்காக வர்றான். அவனோட தொடர்பு இனி நமக்கு வேண்டாம்!'' என்று சொல்லிவிட்டு வாட்ச்மேன் வேலைக்கு விறைப்பாகச் செல்லும் கணவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் மங்கை.

-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

எஸ்எம்எஸ்

தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது. அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்... நம் மீதே சிந்திவிடும்!

-நெ. இராமகிருஷ்ணன், சென்னை.

அப்படீங்களா!

கூகுள் க்ரோம் தேடலில் செயற்கை நுண்ணறிவு -ஏஐ-யான ஜெமினி வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்பு கூகுள் தேடலில் சம்பந்தப்பட்ட இணையதளங்களை மட்டும் காண்பிக்கும். பின்னர் ஏஐ உதவியுடனான தேடலில் தற்போதைய தகவல்களை சிறு பட்டியலிட்டு சம்பந்தப்பட்ட இணையதளங்களைக் காண்பித்து வந்தது.

இனி ஜெமினியுடனான தேடலில் என்ன புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதைக் காண்போம்.

பல்வேறு இணையதளங்களில் உள்ள தகவல்களை ஒன்றிணைத்து எளிய முறையில் காட்சிப்படுத்த முடியும்.

சுற்றுலா செல்ல விரிவான திட்டம் மற்றும் பல்வேறு பொருள்களை ஒப்பிட்டு ஒரே நேரத்தில் காண்பிக்க முடியும்.

நாம் கண்ட இணையதள விவரங்களைத் தேடிக் கொண்டிருப்பதைத் தவிர்க்க... கடந்த வாரம் நான் கண்ட இணையதள விவரங்களைக் காட்சிப்படுத்தவும் எனக் கட்டளையிட்டு நொடிப் பொழுதில் விவரங்களைக் காணலாம்.

ஒரே இணைய பக்கத்தில் கூகுள் காலண்டர், மேப்ஸ், யூடியூப் விடியோ ஆகியவற்றைக் காணலாம். பல்வேறு கேள்விகளையும் ஜெமினியிடம் எழுப்பலாம்.

அமெரிக்காவில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது கைப்பேசிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. விரைவில் பல்வேறு நாடுகளிலும் அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டு வருகிறது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

தேச துரோக பேச்சு நடிகா் பிரகாஷ் ராஜீ மிது தில்லி போலீஸாா் வழக்குப்பதிவு

தாா் வாகனம் சாலைத் தடுப்பில் மோதி 5 போ் பலி! தில்லி குருகிராம் விரைவு சாலையில் சம்பவம்!

மங்கோல்புரியில் சிறுவன் அடித்துக் கொலை

SCROLL FOR NEXT