தினமணி கதிர்

கோலிவுட் ஸ்டூடியோ!

சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து, முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள படம் 'ரைட்'.

டெல்டா அசோக்

கேமராமேனாக பணியாற்றுவதை சில நேரம் தவிர்க்கிறேன் - நட்ராஜ்!

சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து, முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள படம் 'ரைட்'. நடிகை அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் நடித்திருக்கிறார். 'வீரம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினா பார்கவி, கல்லூரி மாணவியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

'பிக் பாஸ்' அக்ஷரா ரெட்டி, வினோதினி உள்ளிட்ட மேலும் சிலரும் இதில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான பாலியல் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் செப்டம்பர் 26 -ஆம் தேதி வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் நட்டி, 'இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். இதன் இயக்குநர் ரமேஷ் என்னிடம் அஸிஸ்டெண்டாக இருந்தவர். அவர் கதை சொன்ன போதே யார், யாரெல்லாம் நடிக்க வேண்டும் என எழுதியே வைத்திருந்தார். அருண் பாண்டியன் சார், ஒரு கோ டைரக்டர் போல இதில் வேலை செய்தார். சமூக அக்கறை மிக்க ஒரு விஷயத்தை இயக்குநர் சொல்லி இருக்கிறார்'' என்று கூறினார்.

தொடர்ந்து அவரிடம், 'பாலிவுட்டில் உங்களை கேமரா மேனாக பணியாற்றுவதற்குத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் நடிப்பதை முக்கியமாகக் கருதி தமிழ்நாட்டில் இருக்கிறீர்கள். பாலிவுட்டில் மீண்டும் பெரிய படங்களில் கேமரா மேனாகப் பணியாற்ற அழைத்தால் செல்வீர்களா?'' என்று செய்தியாளர் கேள்வியை எழுப்பி இருந்தார்.

அதற்குப் பதிலளித்த நட்டி, ' நல்ல கதை, பெரிய நடிகர்கள் இருந்தால் நிச்சயமாகப் பணியாற்றுவேன். கேட்கிற எக்விப்மென்ட் எல்லாம் அங்குத் தருவார்கள். என்னுடைய தொழிலை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பும் கிடைக்கும். இப்போதும் கூட எதாவது இடைவேளை கிடைத்தால் அங்குச் சென்று பணியாற்றிக்கொண்டு தான் இருக்கிறேன்.

ஒளிப்பதிவாளராக மட்டும் பணியாற்றுவதைத் தவிர்த்து வருகிறேன். காரணம், பணியாற்றக் குறைந்தது ஒன்றரை வருடமாவது நேரம் ஒதுக்க வேண்டும். அதேபோல சில கதைகள் சரியாக வருமா என்று சந்தேகம் இருந்தது. அதனால் கேமரா மேனாகப் பணியாற்றுவதை பாலிவுட்டில் சில படங்களில் தவிர்த்து இருக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.

வைரலான போஸ்டர்; ரிஷப் ஷெட்டி விளக்கம்!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2022-ஆம் ஆண்டு 'காந்தாரா' படத்திற்கு நாடுதழுவிய வரவேற்புக் கிடைத்தது. வசூலையும் அள்ளியது.

இப்போது முந்தையப் படத்தைவிடவும் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'காந்தாரா சாப்டர் 1' படம் பெரிய பட்ஜெட்டில், பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 2-ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகியுள்ளது. அதேசமயம், இப்படம் தொடர்பாக போஸ்டர் ஒன்றும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த போஸ்டரில், 'காந்தாரா படத்தைப் பார்க்க வேண்டுமென்றால் இந்த மூன்று விதிமுறைகளை பின்பற்றவும். 1. மது அருந்தக் கூடாது, 2. புகைப்பிடிக்கக் கூடாது, 3. அசைவ உணவை சாப்பிட்டு வந்து பார்க்கக் கூடாது' என்று காந்தாரா படக்குழு அறிவித்தது போல போலியான போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் பல்வேறு எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் சமூகவலைதளங்களில் வெடித்தன.

இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்திருக்கும் படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி, 'உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. அதில் விதிமுறைகள் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அது யாரோ போலியாக உருவாக்கிய போஸ்டர். எங்கள் கவனத்திற்கு அது வந்தபோது எங்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. தங்களை விளம்பரப்படுத்த நினைக்கும் சிலரின் வேலைதான் இது. இதற்கும் இப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.'' என்று விளக்கமளித்திருக்கிறார்.

'குஷி' கதைக்கு விஜய்யின் ரியாக்ஷன்!

25 வருடங்களுக்குப் பிறகு 'குஷி' படம் மீண்டும் திரைக்கு வருகிறது. இதற்கு முன் ரீ-ரிலீஸில் விஜய்யின் 'கில்லி' அதிரடி காட்டிச் சொல்லியடித்தது. அப்படத்தின் ரீ-ரிலீஸ் வெற்றியைத் தொடர்ந்து 'குஷி' படத்தையும் மீண்டும் திரைக்குக் கொண்டு வருகிறார் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம். மறுவெளியீட்டிற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் எஸ்.ஜே. சூர்யா பேசுகையில், 'மறுபடியும் இளைய தளபதியைப் பார்ப்பதில் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஏ.எம். ரத்னம் சார்தான் என்னை விஜய் சார்கிட்ட கதை சொல்றதுக்குக் கூட்டிட்டுப் போனாரு. படத்தின் கதையை நடிகர், உதவி இயக்குநர் தொடங்கி பலர்கிட்ட சொல்லும்போது படத்தின் காட்சிகள் அத்தனையும் என் மனசுக்குள்ள லட்ச முறை ஓடியிருக்கும்.

ஆடியன்ஸ் ப்ரஷான மனநிலையில் வரும் போது ஒரு படத்தை பயங்கரமா என்ஜாய் பண்ணுவாங்க. ஆனா, ஆடியன்ஸூக்கு இருக்கிற சர்ப்ரைஸ் ஒரு இயக்குநருக்கு இருக்காது. இன்னைக்கு இந்த நிகழ்வுல 'குஷி' படத்தின் பாடல்

களைப் பார்வையாளர்களில் ஒருவனாகக் கேட்டு நான் என்ஜாய் பண்ணினேன். 'கட்டிப்பிடிடா' பாடலுக்கு நான் 'செந்தமிழ் தேன்மொழியாய்' பாடலை மெலடியைதான் நான் ரெஃபரன்ஸாக தேவா சார்கிட்ட காமிச்சேன். இந்தப் படத்துக்கு அத்தனையும் அமைந்து வந்ததுனு சொல்லலாம்.

இந்தப் படத்தின் கதையை விஜய் சார் கேட்டுட்டு பெருசா ரியாக்ஷன் கொடுக்கல. நான்கூட அவருக்குக் கதை பிடிக்கலனு நினைச்சு ரத்னம் சாரைப் பார்த்தேன். பிறகு, பிடிக்கலைனா நான் வேற கதை சொல்றேன்னு சொன்னேன். அதுக்கு அவர் 'ஏன், இது நல்லா தானே இருக்கு. இதுவே பண்ணுவோம்'னு சொன்னாரு. அதையே அவர் ரொம்ப அமைதியாகத்தான் சொன்னாரு.'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலிறுதியில் மோதும் ஸ்வெரெவ் - மெத்வதெவ்!

நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

கா‌ந்திய மஹா விரத‌ங்க‌ள்!

இந்திய ராணுவத்துக்கு நிகரானதா பாக். ராணுவம்?

மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது! - கரூா் சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலா் டி. ராஜா!

SCROLL FOR NEXT