முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி...

பெண்கள் உடை தைக்கும் டைலர்கிட்ட சட்டை தைக்கக் கொடுத்தது தப்பாப் போச்சா, ஏன் ?

Updated On : 12 ஏப்ரல், 2026 at 4:12 AM
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 8:41 PM

பெண்கள் உடை தைக்கும் டைலர்கிட்ட சட்டை தைக்கக் கொடுத்தது தப்பாப் போச்சா, ஏன் ?'

'சட்டைக்குப் பின்னாடி ஜன்னல் வச்சி தைச்சிட்டாருடா !'

-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.

Advertisement



'உங்க பையன் பிளஸ் டூ பாஸ் ஆயிட்டானே... மேல படிக்கலையா?'

'இல்லை... எங்க வீட்டுல மாடி இல்லை!'

-தீபிகா சாரதி, சென்னை-5.



'சாப்பிட என்ன செய்யறே... இட்லியா, தோசையா?'

'எதுவோ ஒண்ணு...'

'ஒண்ணு பத்தாது... மினிமம் நாலு வேணும்!'



'கிளம்பின பாத்திரக்காரரை ஏன் திரும்பக் கூப்பிடுறே?'

'அத்தை போட்ட பழைய பாத்திரத்தைப் பாதி விலைக்கு வாங்க!'



'கச்சேரி எடுபடல...'

'எப்படிச் சொல்றே?'

'ஒருத்தர்கூட தூங்கலயே..?'



'ஆரத்தி எடுத்தா தட்டில் பணம் போடுவீங்களா?'

'தட்டில் போட மாட்டோம்... உங்க பேங்க் அக்கவுன்ட்லதான் போடுவோம்!'



'என்ன... வீட்டில் அடகுக் கடை வச்சிருக்கீயா?'

'வீட்டை அடகு வச்சு கடை வச்சிருக்கேன்!'



'உங்க ரெண்டு பேர் சண்டையில எதுக்கு என்னைத் திட்டுறே?'

'சமாதானம் செய்து வைக்க ஏன் வரலைன்னு திட்டுறேன்!'



'அத்தையோடு நீ போடுற சண்டை நல்லாவே இல்லே...'

'சண்டை போடக்கூடாதா?'

'கொஞ்சம் விறுவிறுப்பா போடுன்னு சொல்றேன்.'

-பர்வதவர்த்தினி, பம்மல்.



'கடுமையா கோபம் வந்ததுல சுவர்ல போய் முட்டிக்கிட்டேன், டாக்டர்!'

'ஏன் அப்படிச் செஞ்சீங்க?'

'கோபம் கண்ணை மறைச்சிடுச்சி!'



'அந்த பேஷன்ட் என்னை சைடுல தட்டுறாரு, டாக்டர்?'

'நான்தான் அப்பவே சொன்னேனே... அவரோட மாத்திரைக்கு சைடு எஃபக்ட் உண்டுன்னு!'



'என் பொண்டாட்டியை நான் கண்டிச்சது உன் காதுல விழுந்துச்சாம்மா?'

'என் காதுல விழாட்டியும் பரவாயில்ல... அவ காதுல விழற மாதிரி சொன்னேயில்ல...?'



'ரெண்டாவது தடவை பொரியல் கேட்டா, கரண்டியை ஓங்கறாங்களே...?'

'நான் தான் அப்பவே சொன்னேனே சார்... இந்த ஹோட்டல்ல எல்லாமே 'ஹோம்லியா' இருக்கும்னு!'



'பொண்ணு பார்க்கப் போயிருந்த இடத்துல உனக்கு பிராக்டிகல் எக்ஸôம் வச்சாங்களா... என்னப்பா சொல்றே?'

'அரிசி, பருப்பு, எண்ணெய் எல்லாம் கொடுத்து ஏதாவது டிஷ் செய்துகாட்டச் சொன்னாங்க...!'

-வி.ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.