தினமணி கதிர்

ஒரு ரூபாய் நூல்

பிரேமா நந்தகுமார் குறிப்பிடும் அந்த ஒன்றரை ரூபாய் பாரதியார் கவிதைகளுக்குப் பின் ஒரு செய்தி உண்டு.

தினமணி செய்திச் சேவை

பிரேமா நந்தகுமார் குறிப்பிடும் அந்த ஒன்றரை ரூபாய் பாரதியார் கவிதைகளுக்குப் பின் ஒரு செய்தி உண்டு. 1954-ஆம் ஆண்டு பாரதியின் பாடல்கள் அனைத்தையும் அன்றைய தமிழக அரசு 'பாரதி நூல்கள் -கவிதை' என்று ஒரு தொகுப்பு வெளியிட்டது. அதன் விலை ஏழரை ரூபாய். அது விலை அதிகம் என்று நினைத்த சக்தி பதிப்பகம் வை.கோவிந்தன் காமராஜரை சந்தித்தார். 'வாய்யா, ரெட்!' என்று அவரை காமராஜர் வரவேற்றார்.

காமராஜர் அவரை எப்போதும் அப்படித்தான் அழைப்பார். காரணம், கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றை முதலில் பதிப்பித்தவர் வை.கோ. அந்த நூலுக்கு சிவப்பு வண்ணக் கதர் துணியினால் அட்டை போட்டிருந்தார்.

'பிரிட்டனில் அவர்களது சிறப்பு வாய்ந்த நூல்களை ஒரு ஷில்லிங் விலைக்குக் கொடுக்கிறார்கள். இதோ பாருங்கள் பேர்ள் பெக்கின் குட் எர்த்தை குறைந்த விலைக்கு வெளியிட்டிருக்கிறார்கள். நீங்கள் பாரதி பாடல்களுக்கு ஏழரை ரூபாய் வைத்திருக்கிறீர்கள்.

குறைந்த விலையில் கொடுத்தால் பலரும் வாங்குவார்கள். அவரது கவிதைகள் பரவலாகச் சென்றடையும்' என்றார் வை.கோ.

'நீங்களே அதைச் செய்யலாமே' என்றார் காமராஜர்.

அதை சவாலாக எடுத்துக் கொண்டு வை.கோ. தனது சக்தி காரியாலயம் மூலம் பாரதி கவிதைகளை வெளியிட்டு ஒரு ரூபாய் விலையில் கொடுத்தார். ஒரு மாதத்தில் அது 3000 பிரதிகள் விற்றது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யை சந்தித்தது உண்மை : உ.பி. உடன் தமிழகத்தை ஒப்பிடவில்லை - பிரவீன் சக்கரவர்த்தி

50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்... அமெரிக்காவுக்கு வழங்கியது வெனிசுவேலா!

நீ ஒரு கோழை.. துணிவிருந்தால் என்னை கைது செய்யுங்கள்: டிரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்!

தினந்தோறும் 17 முறை நிவேதனம் அளிக்கப்படும் கிருஷ்ணர் கோயில்!

பணவரவு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT