தினமணி கதிர்

டாப் 7 பெண்கள்

உலகின் முதல் ஏழு பணக்காரப் பெண்மணிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருப்பவர் எழுபத்தாறு வயதான ஆலிஸ் வால்டன்.

பிஸ்மி பரிணாமன்

உலகின் முதல் ஏழு பணக்காரப் பெண்மணிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருப்பவர் எழுபத்தாறு வயதான ஆலிஸ் வால்டன். வால்மார்ட் நிறுவன இணை இயக்குநரான இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 8.38 லட்சம் கோடி.

பெண்களுக்கான அழகு ஒப்பனைப் பொருள்களைத் தயாரிக்கும் 'லோரேல்' நிறுவனத் தலைவரான எழுபத்து இரண்டு வயதான பிராங்ஜாய்ஸ், ரூ.6.77 லட்சம் கோடியுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் உள்ள அறுபத்து மூன்று வயதான ஜூலியா கோச்சுக்கு ரூ. 6.16 லட்சம் கோடி சொத்துகள் உள்ளன.

'மார்ஸ்' நிறுவன உரிமையாளரான எண்பத்து ஆறு வயதான ஜாக்குலின், ரூ.3.53 லட்சம் கோடியுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கும் இத்தாலியைச் சேர்ந்த ராஃபேலா அபண்டுவின் சொத்து மதிப்பு ரூ.3.12 லட்சம் கோடி.

ஆறாவது இடத்தில் உள்ள எழுபத்து ஐந்து வயதான இந்தியப் பெண்மணி சாவித்திரி ஜிண்டாலுக்கு ரூ. 2.94 லட்சம் கோடி சொத்துகள் உள்ளன.

ஏழாவது இடத்தில் அமெரிக்காவின் ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத் தலைமை நிர்வாக அலுவலரான அறுபத்து நான்கு வயதான அபிகெயிலின் சொத்து மதிப்பு ரூ. 2.71 லட்சம் கோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிரியா்கள் பள்ளிக்குத் திரும்ப வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

திருப்பரங்குன்றம் தீப தீா்ப்பு: பாஜக, தமாகா வரவேற்பு

‘வாக்காளா் பட்டியலைத் திருத்த முழு அதிகாரம் உண்டு’- உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் வாதம்

உள்வாடகை வீடு முறையில் மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

கன்னியாகுமரிக்கு ஆட்டோவில் வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT