தினமணி கொண்டாட்டம்

ஐந்து பேர் ஐந்து செய்தி

DIN

• சுதந்திரப்போராட்ட வீரரும் இலக்கியவாதியுமான வ.வே.சு. ஐயருக்கு பத்து மொழிகள் தெரியும். ஒவ்வொரு நாளும் வால்மீகி ராமாயணத்தில் ஒரு பகுதியும், கம்பராமாயணத்தில் ஒரு பகுதியுமாக பத்து ஆண்டுகள் படித்து முடித்தார். கம்பராமாயணத்தை முதல்முதலாக பதம் பிரித்து வெளியிட்டவர் வ.வே.சு. ஐயர்தான்.

• வள்ளலாரின் ஒன்பது பாடல்கள் அடங்கிய சுவடியை அவரது உறவினர்கள் சன்மார்க்க சங்கத்தினரிடம் தர மறுத்தபோது பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அந்த சுவடிகளை அவர்கள் வெளியிடாவிட்டால் நானே வெளியிடுவேன் என்று கூறி அந்த ஒன்பது பாடல்களையும் ஒரு மேடையிலேயே பாடினார். மறுநாளே அந்த உறவினர்கள் சுவடிகளை  ஒப்படைத்தனர்.

• தமிழின் முன்னோடி இலக்கிய இதழான "மணிக்கொடி'யை டி.எஸ். சொக்கலிங்கம், கே. ஸ்ரீனிவாசன் ஆகியோரோடு சேர்ந்து தொடங்கிய வ.ரா. சென்னை வந்திருந்த காந்தியடிகளை பாரதியார் சந்தித்தபோது உடனிருந்தவர்.

• இயக்குநர் கே. பாலசந்தர் சில ஆண்டுகள் முத்துப்பேட்டை என்ற ஊரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது அவர் பள்ளி மாணவர்கள் நடிப்பதற்காக "மாதிரி பாராளுமன்றம்' என்ற ஒரு நாடகத்தை எழுதிக் கொடுத்தார். அதுதான் அவர் எழுதிய முதல் நாடகம்.

• மலையாள மொழியின் முதல் பேசும் படமான "பாலன்', மலையாளத்தின் முதல் வண்ணப்படமான "கண்டம் பெச்ச கோட்டு', தமிழின் முதல் வண்ணப்படமான "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' ஆகிய மூன்று படங்களையும் தயாரித்தவர் ஒருவரே. அவர் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT