தினமணி கொண்டாட்டம்

நாளை தொடங்குகிறது "சாமி 2'

DIN

கடந்த 2003-ஆம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் "சாமி'. ஹரி இயக்கத்தில் வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்தன. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விக்ரம் தெரிவித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு இருந்தார் இயக்குநர் ஹரி. விக்ரம் ஜோடியாக த்ரிஷாவுடன், கீர்த்தி சுரேஷும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக பணியாற்றுவதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டவாறு தொடங்காமல் இருந்தது.  கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் "துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பை குறித்த நேரத்தில் முடிக்காமல் போனதே இதற்கு காரணமாக  சொல்லப்படுகிறது. விக்ரமின் கால்ஷீட்டில் அடிக்கடி எழுந்த குளறுபடிகளால், படப்பிடிப்பு தள்ளி போனது. இந்நிலையில் தற்போது துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து "சாமி 2' படத்தின் படப்பிடிப்பு  நாளை முதல் தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெட்சணமாறக நாடாா் சங்க கல்லூரி ஆண்டு விழா

சேரன்மகாதேவி அருகே மின்கம்பம் விழுந்து ஒப்பந்த ஊழியா் பலி

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் மே 13- இல் வைகாசி திருவிழா கொடியேற்றம்

பிளஸ் 2: திலகா் பள்ளி 99.2% தோ்ச்சி

SCROLL FOR NEXT