தினமணி கொண்டாட்டம்

முதலிடத்தில் சல்மான்கான்!

தினமணி

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் இந்தியாவிலேயே அதிகம் சம்பாதித்த சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 100 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை ரூ. 253.25 கோடி சம்பாதித்து, பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடத்தில் உள்ளார். சினிமா, விளம்பரம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் இந்த தொகையை அவர் சம்பாதித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உள்ளார். அவர் ரூ. 228 கோடி சம்பாதித்துள்ளார். ரூ. 185 கோடி சம்பாதித்துள்ள ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் மூன்றாம் இடத்தில் உள்ளார். கடந்த முறை இரண்டாம் இடத்தில் இருந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான், இந்த ஆண்டு 13-ஆவது இடத்துக்கு சென்றுள்ளார். அவர் ரூ. 56 கோடி மட்டுமே சம்பாதித்துள்ளார். அவருக்கு விளம்பர பட வாய்ப்புகள் குறைந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. 5-ஆவது இடத்தில் இருக்கும் தோனி, ரூ. 101.77 கோடியும், 9 -ஆவது இடத்தில் உள்ள சச்சின் ரூ. 80 கோடி குவித்துள்ளார். அமீர்கான் ரூ. 97 கோடியுடன் 6-ஆவது இடத்தில் இருக்கிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ. 66.75 கோடியுடன் 11-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். நடிகைகள் உள்ளிட்ட 18 பெண்களும் இந்தப் பட்டியலில் உள்ளனர். பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். மம்முட்டி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட சிலர் இந்தப் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

SCROLL FOR NEXT