தினமணி கொண்டாட்டம்

திரைக் கொண்டாட்டம்

தினமணி

அந்த நிமிடம்: பரபரப்பும் அதிர்ச்சிகளும் நிறைந்த பொள்ளாச்சி சம்பவத்தைத் தழுவி வரிசையாகப் படங்கள் உருவாகி வருகின்றன. இந்த வரிசையில் அடுத்து இணையவுள்ள படம் "அந்த நிமிடம்' . எல் டபிள்யூ நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. ருத்ரா, நாசின், சஞ்சனா நாயுடு, லால்வீரசிங் உள்ளிட்ட ப் பலர் நடிக்கின்றனர். கே. பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய குழந்தை ஏசு கதை எழுதி இயக்குகிறார். ஏற்கெனவே "கோத்ரா'  உள்ளிட்ட சிங்களப் படங்களை இயக்கிய இவர் முதல் முறையாகத் தமிழுக்கு வருகிறார். படம் குறித்து பேசும் போது.... ""ஆண்மையும்  பெண்மையும் உருவங்கள் மட்டுமே இல்லை. அதில் அவ்வளவு உணர்வுகள் உண்டு. ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல், அடைய வேண்டும் என்று நினைக்கிற போதுதான் அசிங்கமாகி விடுகிறோம். பெரும்பாலான ஆண்கள் அசிங்கமாக நிற்பதற்கு, பெண்மையை அடைந்து விட வேண்டும் என நினைப்பதுதான் காரணம்.  ஒருவரின் வலியை  இன்னொருவர் புரிந்துக் கொள்ளும் போதுதான் வாழ்க்கை அழகாக மாறுகிறது. ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தில் தேடும் போதும், தொலைக்கும் போதும்தான் நாம் மனிதர்களாக ஆகிறோம்''  என்றார் இயக்குநர்.


இருவர் ஒப்பந்தம்

சமீர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "இருவர் ஒப்பந்தம்'. அர்ஜூன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராதிகா குமராசாமி நடிக்கிறார். சோனி சிறிஸ்டா, ஜே.டி. சக்ரவர்த்தி, வையாபுரி, செந்தில் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராம்கோபால் வர்மாவின் மாணவர் எஸ்.எஸ்.சமீர் கதை எழுதி இயக்குகிறார். இந்தியாவின் முன்னணி தொழில் அதிபராக இருக்கிறார் அர்ஜுன். தொழில் முறை பயணமாகத் தனது சாகக்களுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார். பயணத்தில் தன்னுடன் வந்த பெண் ஊழியருக்கு பெரும் பிரச்னை ஏற்படுகிறது. சட்டென நிகழ்ந்து விடுகிற அந்தச் சம்பவம், அத்தனை பேரையும் பாதிக்கிறது. அதிலிருந்து அர்ஜுன் குழுவினர் மீண்டனரா... அந்தச் சதி வலையின் பின்னணியில் இருப்பது யார்... என்பதற்குப் பதில் சொல்லுகிறது கிளைமாக்ஸ். மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, புனே, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் இந்த மாத இறுதியில் தொடங்குகிறது. விரைவில் படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது.

சண்டிமுனி


சிவம் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "சண்டிமுனி'.  நட்டி, மனிஷா யாதவ், யோகி பாபு, வாசு விக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் மில்கா செல்வகுமார். படம் குறித்து அவரிடம் பேசும் போது...  ""ஹாரர் பாணி படமாக இது உருவாகி வருகிறது. நட்டி }  மனிஷா யாதவ் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் நட்டிக்கு திடீரென்று ஒரு பிரச்னை. அந்தப் பிரச்னையில் இருந்து அவர் விடுபடவும் இருவருக்கும் திருமணம் நடக்கவும் குல தெய்வ வழிபாட்டு முறைதான் சரி எனத் தெரிய வருகிறது. குல தெய்வ வழிபாட்டு முறை நடந்ததா... அதிலுள்ள பிரச்னைகள் என்ன... திருமணம் நடந்ததா... என்பதே திரைக்கதை. இந்தப் படத்திற்காக சென்னை வளசரவாக்கம் பகுதியில் முனீஸ்வரன் கோயில் அரங்கும் சிலையும் அமைக்கப் பட்டது. முப்பது அடி உயர சிலை அமைக்கப்பட்டு அதன் முன் மனீஷா யாதவ் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்டன.  40 நடன கலைஞர்கள் 300  துணை நடிகர், நடிகைகள் பங்கேற்க அசோக்ராஜா நடனம் அமைத்தார். 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பழனி, கொடைக்கானல், பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மீண்டும் இரட்டை வேடம் 

"கொடி' படத்தில் அண்ணன் - தம்பி என இரு வேடங்களில் நடித்தார் தனுஷ். இப்போது வெற்றிமாறன் இயக்கி வரும் "அசுரன்' படத்திலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதில் அவர் தந்தை மகனாக நடிக்கிறார். 45 வயது நிரம்பிய தந்தை தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகிறார். பூமணி எழுதியிருக்கும் "வெக்கை'  என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென், பவன் நடிக்கின்றனர். ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து  துரை. செந்தில்குமார் இயக்கும் படத்திலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு தனுஷுக்கு ஜோடியாக சிநேகா நடிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT