தினமணி கொண்டாட்டம்

அய்யா உள்ளேன் அய்யா

DIN

"சேரன் பாண்டியன்', "நாட்டாமை', "பரம்பரை', "சமுத்திரம்' போன்ற படங்களுக்குக் கதை வசனம் எழுதியவர் ஈரோடு சௌந்தர். அத்துடன் "முதல் சீதனம்", "சிம்மராசி' படங்களையும் இயக்கி இருக்கிறார்.குடும்பக் கதைகளுக்கு  சென்டிமெண்ட் வசனங்கள் எழுதுவதில் வல்லவர். சிறிது இடைவெளிக்குப் பின் இவர் எழுதி இயக்கும் படம் "அய்யா,  உள்ளேன் அய்யா'.இந்த படத்தில் தனது பேரன் கபிலேஷை கதாநாயகனாக களம் இறக்குகிறார். இன்னொரு எதிர் மறை நாயகனாக தனது தம்பி மகன் பால சபரீஸ்வரனை நடிக்க வைக்கிறார். கதாநாயகியாகப் பிரார்த்தனா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். மனோபாலா, லிவிங்ஸ்டன், பாவா லட்சுமணன், நளினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  

படம் குறித்து பேசும் போது... ""10-ஆ ம் வகுப்பு  பள்ளிக்கூடக் கதை என்பதால் இந்தக் கதைக்கு 10 -ஆ ம் வகுப்பு படிக்கும் தனது பேரன் சரியாக  இருக்கும் என்பதால் நாயகனாக அறிமுகப் படுத்துகிறேன். மாணவர்களின் எதிர்காலம் என்பது 10 -ஆம் வகுப்பிலிருந்து  12-ஆம் வகுப்புக்குள்ளான காலக் கட்டம் தான். மாணவர்கள் கவனத்துடன் செயல்பட்டால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கொஞ்சம் தடம் மாறினாலும் அவர்கள் வாழ்க்கை திசை மாறி விடும் என்கிற கருத்தை சொல்கிற படமாக  இருக்கும்'' என்றார் ஈரோடு சௌந்தர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

SCROLL FOR NEXT