தினமணி கொண்டாட்டம்

 வாழ்க விவசாயி

தினமணி

விவசாயிகளின் வாழ்க்கை நிலையைப் பின்புலமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "வாழ்க விவசாயி'.
 அப்புக்குட்டி, வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
 பொன்னிமோகன் எழுதி இயக்குகிறார். இயக்குநர் பேசும் போது...
 "விவசாயம்தான் பேசு பொருள். இன்றைக்கு சென்னை போன்ற பெரு நகரங்களில் சுற்றிக் கொண்டிருப்பவர்களில் அதிகம் விவசாயிகளின் பிள்ளைகள்தான். சுமார் 20 மாவட்டங்கள் வரை தமிழகத்துக்கு
 விவசாயம் தான் ஆதாரம். நீர், காற்று என எல்லாமே கொடுத்து வைத்த பூமி. உலக மயமாக்கலின் சுவடுகள் வந்தேறிய பின்பும், விவசாயத்தின் எச்சங்களை இன்னும் அப்படியே அடைக் காத்து வைத்திருக்கும் மண். இதுதான் களம்.
 அன்பு, காதல், பரிவு... கதையை நகர்த்தும் கரு. விவசாய நிலம் என்பது கதையின் நெகிழ்வான பின்னணிதான். மனித உறவுகளும் முதன்மையானது. விவசாயத்தின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் உணவை சார்ந்து இருக்கிறது . உணவு விவசாயத்தையும் , விவசாயியையும் சார்ந்து இருக்கிறது . விவசாயம் நீரை சார்ந்துள்ளது . விவசாய வாழ்வின் அன்பையும் , வியர்வையையும் ஏமாற்றத்தையும் , கண்ணீரையும் , கோபத்தையும் நையாண்டித்தனமாகவும் , நகைச்சுவையாகவும் சொல்லுவதே படம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம், ஜலகண்டபுரம் மேம்பாலம் அருகே 3 உடல்கள்: கொலையா?

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT